முகப்பு /செய்தி /விளையாட்டு / உலகக்கோப்பை ஹாக்கி : பெல்ஜியமை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது ஜெர்மனி

உலகக்கோப்பை ஹாக்கி : பெல்ஜியமை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது ஜெர்மனி

ஜெர்மனி ஹாக்கி அணி

ஜெர்மனி ஹாக்கி அணி

ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் தலா 3 கோல்களை அடித்து சமநிலையில் இருந்தன. இதையடுத்து வெற்றியை தீர்மானிக்கும் பெனால்டி ஷூட் அவுட் நடத்தப்பட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

உலகக்கோப்பை ஹாக்கி இறுதிப் போட்டியில் பெல்ஜியம் அணியை வீழ்த்தி ஜெர்மனி சாம்பியன்ப ட்டத்தை வென்றுள்ளது. இந்த கோப்பையுடன் ஹாக்கியில் ஜெர்மனி அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை பெறுகிறது. உலக கோப்பை ஹாக்கி தொடர் ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலா ஆகிய நகரங்களில் கடந்த 13ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. இந்தப் போட்டியில் மொத்தம் 16 அணிகள் 4 குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டியில் பங்கேற்றன. லீக் சுற்றில் ஒவ்வொரு குழுவிலும் முதலிடம் பெற்ற அணி நேரடியாக காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களை பிடித்த அணிகள் கிராஸ் ஓவர் சுற்று மூலமாக தங்களது பலத்தை நிரூபித்து காலிறுதிக்கு முன்னேறி. இங்கிலாந்து, ஜெர்மனி, பெல்ஜியம், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, தென்கொரியா மற்றும் ஸ்பெயின் ஆகிய அணிகள் கால் இறுதி போட்டியில் விளையாடின.

ஆஸ்திரேலியா, பெல்ஜியம், ஜெர்மனி மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகள் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றன. இவற்றிலிருந்து ஜெர்மனி மற்றும் நடப்பு சாம்பியனான பெல்ஜியம் அணிகள் இறுதிப் போட்டிக்கு சென்றன. இந்நிலையில் இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இரு அணிகளுக்கு வழங்கப்பட்ட ஆட்ட நேரத்தில் இரு அணிகளும் தலா 3 கோல்களை அடித்து சம நிலையில் இருந்தன.

இதையடுத்து கோப்பையை வெல்வது யார் என்பதை தீர்மானிக்கும் பெனால்டி ஷூட் அவுட் நடத்தப்பட்டது. இதில் 5-4 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியனான பெல்ஜியம் அணியை வீழ்த்தி ஜெர்மனி சாம்பியன் பட்டடத்தை வென்றது. உலகக்கோப்பையை வென்ற ஜெர்மனி அணிக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.

First published:

Tags: World Cup Hockey 2023