ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

உலகக்கோப்பை ஹாக்கி : காலிறுதியில் நியூசிலாந்தை வெளியேற்றியது நடப்பு சாம்பியன் பெல்ஜியம்

உலகக்கோப்பை ஹாக்கி : காலிறுதியில் நியூசிலாந்தை வெளியேற்றியது நடப்பு சாம்பியன் பெல்ஜியம்

கோல் அடித்த உற்சாகத்தில் பெல்ஜியம் வீரர்கள்

கோல் அடித்த உற்சாகத்தில் பெல்ஜியம் வீரர்கள்

நியூசிலாந்து அணியின் தடுப்பு சுவர்களை அற்புதமாக கடந்த பெல்ஜியம் வீரர்கள் 11 ஆவது நிமிடத்தில் கோலை அடித்து முன்னிலை பெற்றனர்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

உலகக்கோப்பை ஹாக்கி தொடரில் நடைபெற்ற 2ஆவது காலிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை நடப்பு சாம்பியனான பெல்ஜியம் அணி வெளியேற்றி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது. தொடர் வெற்றிகளை நியூசிலாந்து அணி அதிரடியாக குவித்து வந்த நிலையில், அதற்கு பெல்ஜியம் அணி முற்றுப்புள்ளி வைத்துள்ளது. கிராஸ் ஓவர் சுற்றின்போது இந்திய அணியை பெனால்டி ஷூட் அவுட்டில் நியூசிலாந்து அணி வெளியேற்றியது என்பது குறிப்பிடத்தக்கது. உலகக்கோப்பை ஹாக்கி தொடர் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரம் மற்றும் ரூர்கேலாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற முதல் காலிறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணியை வென்று ஆஸ்திரேலியா அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இந்நிலையில் 2ஆவது காலிறுதி போட்டி நேற்று நடப்பு சாம்பியன் பெல்ஜியம் மற்றும் நியூசிலாந் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இரு அணிகளும் டிஃபென்ஸில் அற்புதமாக செயல்பட்டதால் ஆட்டம் நல்ல விறுவிறுப்பாக அமைந்தது. நியூசிலாந்து அணியின் தடுப்பு சுவர்களை அற்புதமாக கடந்த பெல்ஜியம் வீரர்கள் 11 ஆவது நிமிடத்தில் கோலை அடித்து முன்னிலை பெற்றனர். இந்த கோலை டாம் பூன் அருமையாக அடித்து ரசிகர்களின் பாராட்டை பெற்றார். அடுத்ததாக 16 ஆவது நிமிடத்தில் ஃப்ளோரன்ட் வான் ஆபல் இன்னொரு கோலை அடிக்க ஆட்டம் 2-0 என்ற கணக்கில் பெல்ஜியம் பக்கம் திரும்பியது.

இதன்பின்னர் இரு அணிகளும் கோலை அடிக்க கடுமையாக முயற்சித்தன. குறிப்பாக எந்த கோலும் அடிக்காத நியூசிலாந்து அணி மிகுந்த பரபரப்புடன் முழு திறமையை வெளிப்படுத்தி விளையாடியது. இதேபோன்று இன்னொரு கோலை அடித்து வெற்றியை உறுதி செய்வதற்கு பெல்ஜியம் அணி வீரர்கள் போராடினர். இருப்பினும் எந்த அணியாலும் இறுதி வரை கோல் அடிக்க முடியவில்லை. இதையடுத்து பெல்ஜியம் அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.

First published:

Tags: World Cup Hockey 2023