ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

உலகக்கோப்பை ஹாக்கி : ஸ்பெயின் அணியை வென்று அரையிறுதிக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா…

உலகக்கோப்பை ஹாக்கி : ஸ்பெயின் அணியை வென்று அரையிறுதிக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா…

ஆஸ்திரேலியா - ஸ்பெயின் மேட்ச்

ஆஸ்திரேலியா - ஸ்பெயின் மேட்ச்

இந்த ஆட்டத்தின் 19 மற்றும் 23 ஆவது நிமிடங்களில் ஸ்பெயின் அணியினர் கோல் அடித்து முன்னிலை பெற்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

உலகக்கோப்பை ஹாக்கி தொடரில் ஆஸ்திரேலியா மற்றும் ஸ்பெயின் அணிகளுக்கிடையே நேற்று முதல் காலிறுதி போட்டி நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது. உலக கோப்பை ஹாக்கி தொடர் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரம் மற்றும் ரூர்கேலாவில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தொடரில் கிராஸ்ஓவர் சுற்றில் நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்த இந்திய அணி, உலக கோப்பை தொடரை விட்டு வெளியேறியது. இந்நிலையில் நேற்று நடந்த முதல் காலிறுதி சுற்றில் வலுவான ஆஸ்திரேலிய அணியை, ஸ்பெயின் அணி எதிர்கொண்டது. ஆஸ்திரேலியாவுக்கு கடும் சவாலை கொடுக்கும் வகையில், ஸ்பெயின் அணியின் ஆட்டக்காரர்கள் தங்களது முழு திறனை வெளிப்படுத்தி விளையாடினர். ஆட்டத்தின் முதல் அரைநேர பகுதியில் ஸ்பெயின் அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

ஆனால் அடுத்த பாதி நேர பகுதியில் ஆஸ்திரேலிய அணி அதிரடியாக விளையாடி, கோல்களை குவிக்க ஆரம்பித்தது. இறுதியாக 4-3 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணியை வெளியேற்றி ஆஸ்திரேலியா அரையிறுதிக்குள் நுழைந்தது. இந்த போட்டியின் போது தங்களுக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்புகள் சிலவற்றை ஆஸ்திரேலிய வீரர்கள் சரியாக பயன்படுத்தவில்லை. இந்த ஆட்டத்தின் 19 மற்றும் 23 ஆவது நிமிடங்களில் ஸ்பெயின் அணியினர் கோல் அடித்து முன்னிலை பெற்றனர். ஆனால் அடுத்து சுதாரித்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி வீரர்கள் 29, 31, 32 மற்றும் 36 ஆகிய ஆட்டநேர நிமிடங்களில் அடுத்தடுத்த கோல்களை பதிவு செய்து ஸ்பெயின் அணிக்கு அதிர்ச்சி கொடுத்தனர்.

ஆஸ்திரேலிய அணி அடித்த 4 கோல்களும் 7 நிமிடங்களுக்கு உள்ளாக, அதாவது ஆட்டத்தின் 29 ஆவது நிமிடத்திலிருந்து ஆட்டத்தின் 36 ஆவது நிமிடங்களுக்கு உள்ளாக எடுக்கப்பட்டவை ஆகும். இந்த கோல் மூலம் 4-2 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலை பெற்றிருந்தது. அடுத்து ஸ்பெயின் அணி கோல் அடிக்க கடுமையாக போராடியது. 40வது நிமிடத்தில் அந்த அணியால் ஒரு கோல் அடிக்க முடிந்தது. அதன்பின்னர் சிறப்பாக ஆட்டத்தை டிபன்ஸ் செய்து ஆஸ்திரேலிய அணி அரை இறுதியை உறுதிசெய்தது.

First published:

Tags: World Cup Hockey 2023