முகப்பு /செய்தி /விளையாட்டு / WC qualifier 2022 - மெஸ்ஸி இல்லாத அர்ஜென்டீனாவிடம் சிலி தோல்வி- உ.கோப்பை வாய்ப்பை இழந்தது

WC qualifier 2022 - மெஸ்ஸி இல்லாத அர்ஜென்டீனாவிடம் சிலி தோல்வி- உ.கோப்பை வாய்ப்பை இழந்தது

சிலியை வீழ்த்திய அர்ஜெண்டினா.

சிலியை வீழ்த்திய அர்ஜெண்டினா.

வியாழன் அன்று சிலியில் உள்ள கலாமாவில் நடந்த உலகக் கோப்பை தகுதிச் சுற்று கால்பந்து போட்டியில் அர்ஜெண்டினாவின் ஏஞ்சல் டி மரியா மற்றும் லாடரோ மார்டினெஸ் ஆகியோரின் கோல்களால் அர்ஜென்டினா 2-1 என்ற கோல் கணக்கில் சிலியை வெற்றி பெற்றது.

  • Last Updated :

வியாழன் அன்று சிலியில் உள்ள கலாமாவில் நடந்த உலகக் கோப்பை தகுதிச் சுற்று கால்பந்து போட்டியில் அர்ஜெண்டினாவின் ஏஞ்சல் டி மரியா மற்றும் லாடரோ மார்டினெஸ் ஆகியோரின் கோல்களால் அர்ஜென்டினா 2-1 என்ற கோல் கணக்கில் சிலியை வெற்றி பெற்றது. இதன் மூலம் கத்தார் உலகக்கோப்பைக்கு ஏற்கெனவே தகுதி பெற்ற அர்ஜெண்டினா 3 புள்ளிகளைப் பெற்றது.

மெஸ்ஸிக்கு COVID-19 நோய்த்தொற்றுக்குப் பிறகு ஓய்வளிக்கத் தீர்மானித்தது, ஆனால் அவரது பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன் அணி வீரர் டி மரியா 10 நிமிடங்களுக்குப் பிறகு பாக்சுக்கு வெளியே இருந்து ஒரு ட்ரேட் மார்க் கர்லிங் ஷாட் மூலம் அர்ஜென்டீனாவுக்கு முன்னிலை அளிக்க முன்வந்தார்.

சிலியின் இங்கிலாந்தில் பிறந்த ஸ்ட்ரைக்கர் பென் ப்ரெரட்டன் 10 நிமிடங்களுக்குப் பிறகு கோல்கீப்பர் எமிலியானோ மார்டினெஸ் மீது தலையால் முட்டிய கோலால் சமன் செய்தார்.

சிலி கோல் கீப்பர் கிளாடியோ பிராவோவுக்கு ஏற்பட்ட காயத்தை பயன்படுத்திக் கொண்ட அர்ஜென்டினா, இடைவேளைக்கு 11 நிமிடங்களுக்கு முன் வெற்றியை வசப்படுத்தியது.

ரோட்ரிகோ டி பால் 30 மீட்டரிலிருந்து ஒரு பிரமாதமான ஷாட்டை ஆட கோல்கீப்பரால் அந்த ஷாட்டை தள்ளி விட மட்டுமே முடிந்தது ஆனால் லாடரோ மார்டினெஸ் உடனேயே செயல்பட்டு ரீபவுண்டை கோலாக மாற்றினார்.

இதனால் கத்தார் உலகக்கோப்பைக்குத் தகுதி பெறும் சிலியின் நம்பிக்கைக்கு இந்தத் தோல்வி பேரடியாக அமைந்தது. 10 அணிகள் கொண்ட தென் அமெரிக்க தகுதிச் சுற்றில் மூன்று போட்டிகள் மட்டுமே உள்ள நிலையில், 16 புள்ளிகளுடன் ஏழாவது இடத்தில் உள்ளது சிலி.

முதல் நான்கு இடங்கள் தானாகவே தகுதி பெறும் மற்றும் ஐந்தாவது இடத்தைப் பிடிக்கும் அணி ஆசிய கூட்டமைப்பிலிருந்து ஒரு அணியுடன் பிளேஆஃப் செல்லும்.

முதலிடத்தில் உள்ள பிரேசில் மற்றும் இரண்டாவது இடத்தில் உள்ள அர்ஜென்டினா ஏற்கனவே தகுதி பெற்றுள்ளதுடன், 24 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ள ஈக்வடார் அவர்களுடன் இணைவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

First published:

Tags: 2018 fifa world cup, Argentina, Football