world cup qualifiers 2022: நெய்மார் அட்டகாச ஆட்டம்: 6-க்கு 6 வெற்றி- பராகுவாவை வீழ்த்திய பிரேசில்

நெய்மார். பிரேசில்.

தென் அமெரிக்க நாடான பராகுவா தலைநகர் அசுன்சியானில் செவ்வாயன்று நடைபெற்ற உலகக்கோப்பை 2022 கால்பந்து தொடருக்கான தென் அமெரிக்க கால்பந்து தகுதிச் சுற்றுப் போட்டியில் பராகுவா அணியை பிரேசில் 2-0 என்று வீழ்த்தியது.

  • Share this:
பிரேசில் அணி இந்தப் போட்டியில் மாற்றப்பட்ட வெள்ளை கால்சராய் மற்றும் நீலக்கலர் டிஷர்ட் சீருடையில் இறங்கினர். பராகுவா அணி நீல கால்சராய் மற்றும் சிகப்பு ஸ்ட்ரைப் டிஷர்ட் சீருடையில் இறங்கினர்.

இதன் மூலம் 6 போட்டிகளில் 6-ஐயும் வென்று 18 புள்ளிகளுடன் அட்டவணையில் முதலிடம் வகிக்கிறது பிரேசில் நெய்மார் முதல் பாதியில் முதல் கோலை அடிக்க, 93வது நிமிடத்தில் விசில் ஊதுவதற்கு சற்று முன் பிரேசிலின் லூகாச் பகெட்டா வலது புறத்திலிருந்து இடது காலால் பிரமாதமாக ஒரு ஷாட்டை ஆட அது பராகுவா கோலுக்குள் பாய்ந்தது பிரேசில் 2-0 என்று வென்றது.

Also Read: Euro 2020: வார்ம்- அப் போட்டியில் கிரீஸ்மேனின் அபார பைசைக்கிள் கிக் கோல்- பல்கேரியாவை பந்தாடிய பிரான்ஸ்

பிரேசில் ஆரம்பத்திலேயே பிரமாதமாக ஒரு அதிவிரைவு ஆட்டத்தைக் கடைப்பிடித்தது. கேப்ரியல் ஜீசஸ் மீண்டும் பிரேசில் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். அவர் 4 நிமிடத்துக்குள்ளேயே தன் திறமையைக் காட்டி வலது புறத்திலிருந்து ஒரு கிராஸ் ஷாட் ஆட ரிகார்லிசன் அதை அடிக்கும் முயற்சி தோல்வியடைய பந்து நெய்மாரிடம் வந்தது அங்கு நெய்மாரைத் தடுக்க பராகுவா வீரர் யாரும் இல்லை, அங்கு மார்க் செய்யப்படாமல் நெய்மார் தனித்து விடப்பட்டதால் அவர் பந்தை 2 அடி எடுத்துச் சென்று கோலாக மாற்றினார். பராகுவா கோல் கீப்பர் ஆண்டனி சில்வாவால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

பராகுவா அணியும் விடவில்லை, 30 யார்டிலிருந்து பராகுவா செண்டர் பேக் நிலையில் இருந்த வீரர் ஓமர் அல்டெரேட் அடித்த பிரமாதமான ஷாட் ஏறக்குறைய கோலாகியிருக்கும் ஆனால் பிரேசில் கோல் கீப்பர் எடெர்சன் பிரமாதமாக அதை முறியடித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதே போல் மிகுயெல் அல்மிரான் பிரேசிலின் கோல் அருகில் அடித்த ஷாட் ஒன்றை பிரேசில் வீரர் ஈடர் மிலித்தோ தட்டி விட்டு காப்பாற்றினார்.

Also Read:  World Cup qualifiers கால்பந்து: மெஸ்ஸியின் அர்ஜெண்டினாவை மிரட்டிய கொலம்பியா: த்ரில் ஆட்டம் 2-2 என டிரா

இடைவேளைக்குப் பிறகு பராகுவா அணி தாக்குதல் முறையில் தொடங்கியது. குஸ்தாவோ கோம்ஸின் தலையால் முட்டப்பட்ட பந்தை பிரேசில் கோல் கீப்பர் எடர்சன் தடுத்து விட்டார். பிறகு நெய்மார் தனது அபார ஷாட்டின் மூலம் கோலுக்கு ஒரு வாய்ப்பை அமைத்துக் கொடுக்க மார்க்கின்ஹோஸ் வாய்ப்பைப் பயன்படுத்தாமல் தலையால் வெளியே அடித்தார். கடைசியில் 93வது நிமிடத்தில் லூகாச் பகெட்டா இரண்டாவது கோலை அடிக்க பிரேசில் 2-0 என்று வெற்றி பெற்றது.

நெய்மார் ஜூனியர் இந்தப் போட்டிக்கு முன்பு 4 கோல்கள் மற்றும் 3 கோல்களுக்கு உதவிபுரிந்தவராக இருந்தார். நேற்று அடித்த ஒரு கோல் மூலம் பிரேசிலுக்கு அவரது கோல் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. 105 போட்டிகளில் பிரேசிலுக்கு ஆடினார்.
Published by:Muthukumar
First published: