ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் 22ம் தேதி முதல் 27வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் தொடங்குகிறது. இந்தப் போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்கள், வீராங்கனைகள், இவர்கள் எதிர்த்து விளையாடும் போட்டிகள் குறித்த அட்டவணை வெளியிடப்பட்டது. 28ம் தேதி வரை உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் நடைபெறுகிறது.
இதில் காமன்வெல்த் தங்க மங்கை பிவி.சிந்து நேரடியாக 2ம் சுற்றில் களமிறங்கினாலும் அவர் கடினமான வீராங்கனைகளை எதிர்கொள்ளும் பிரிவில் உள்ளார். இந்த செக்கை அவர் எப்படி எதிர்கொள்கிறார் என்பதில்தான் அவரது பெரிய சவால் அடங்கியுள்ளது.
ஆசிய சாம்பியனான சீனாவின் வாங் ஷயீயை அவர் முதலில் எதிர்கொள்கிறார். வாங் ஷியீ கடந்த மே மாதம் நடந்த ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் உலக சாம்பியன் யாமகுச்சியை 15-21, 21-13, 21-19 என்று தோற்கடித்து சாம்பியன் ஆனவர். பெரிய வீராங்கனை.
ஆனால் இவரை பி.வி.சிந்து சிங்கப்பூர் ஓபன் 2022 இறுதிப் போட்டியில் 21-9, 11-21, 21-15 என்று வீழ்த்தி சாம்பியன் ஆனதையும் மறக்க முடியாது, ஆனால் வாங் ஷயீ கடினமான வீராங்கனை என்பதில் ஐயமில்லை.
இந்த முதல் செக்கை சிந்து கடந்து விட்டார் என்றால் 3வது சுற்றில் தென் கொரிய வீராங்கனை ஆன்-சி-யங் என்பவரை சந்திக்க நேரிடலாம், இவரும் செம ஃபார்மில் இருக்கிறார். ஆன்-சி-யங்குக்கு எதிராக சிந்து இதுவரை ஆடிய 5 ஆட்டங்களிலும் தோல்வி கண்டிருப்பது கவனிக்கத்தக்கது.
மற்றொரு இந்திய வீராங்கனை சாய்னா நெவால், முதல் சுற்றில் ஹாங்காங் வீராங்கனை செங் நிகனுடன் மோதுகிறார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர்கள் ஸ்ரீகாந்த், அயர்லாந்து வீரர் நிகாத் நிகயேனையும் லக்ஷயா சென், டென்மார்க்கின் விட்டிங்ஹசையும் , எச்.எஸ்.பிரனாய், ஆஸ்திரியாவின் லுகா விராபெர்ரையும், சாய் பிரனீத், சீனதைபே வீரர் சோவ் டைன் சென்னையும் முதல் சுற்றில் சந்திக்கிறார்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.