உலக தடகளப் போட்டிகள் 2022: இந்தியாவின் தங்கக் கனவை ஏந்திச்செல்லும் நீரஜ் சோப்ரா
உலக தடகளப் போட்டிகள் 2022: இந்தியாவின் தங்கக் கனவை ஏந்திச்செல்லும் நீரஜ் சோப்ரா
நீரஜ் சோப்ரா மற்றும் நீளம் தாண்டுதல் வீரர் முரளி ஸ்ரீசங்கர்
யூஜீனில் இன்று முதல் தொடங்கும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளுக்காக ஒலிம்பிக் தங்கமகன் ஈட்டி எறிதல் ஹீரோ நீரஜ் சோப்ரா உட்பட 22 இந்திய வீரர்கள் யூஜீன் சென்றுள்ளனர். ஜூலை 15 முதல் 24ம் தேதி வரை இந்தப் போட்டிகள் நடைபெறுகின்றன.
யூஜீனில் இன்று முதல் தொடங்கும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளுக்காக ஒலிம்பிக் தங்கமகன் ஈட்டி எறிதல் ஹீரோ நீரஜ் சோப்ரா உட்பட 22 இந்திய வீரர்கள் யூஜீன் சென்றுள்ளனர். ஜூலை 15 முதல் 24ம் தேதி வரை இந்தப் போட்டிகள் நடைபெறுகின்றன.
இதில் 140 கோடி இந்திய மக்களின் தங்கப் பதக்க கனவை ஜாவ்லின் த்ரோ கிங் நீரஜ் சோப்ரா ஏந்திச்செல்கிறார். அதே போல் நீளம் தாண்டுதல் வீரர் முரளி ஸ்ரீசங்கரும் நம்பிக்கை அளிக்கிறார்.
இந்த சீசனில் சோப்ரா சிறப்பாக ஆடிவருகிறார். நட்சத்திர தடகள வீரர் தனது தனிப்பட்ட சாதனையை இரண்டு முறை மேம்படுத்தியுள்ளார் - ஜூன் 14 அன்று ஃபின்லாந்தில் நடந்த பாவோ நூர்மி விளையாட்டுப் போட்டிகளில் அவர் 89.30மீ தூரம் எறிந்து சாதனை புரிந்தார். பிறகு ஜூன் 30 அன்று மதிப்புமிக்க ஸ்டாக்ஹோம் டயமண்ட் லீக் போட்டியில்89.94 மீ, தூரம் எறிந்தார்.
இடையில், பின்லாந்தில் நடந்த குர்டேன் விளையாட்டுப் போட்டியில் ஈட்டி எறிதல் போட்டியில் ஈரமான மற்றும் வழுக்கும் சூழ்நிலையில் 86.69 மீ தூரம் எறிந்து வென்றார் நீரஜ் சோப்ரா. அவர் இருக்கும் ஃபார்முக்கு டோக்கியோ ஒலிம்பிக் சாம்பியன் சோப்ரா, வரலாற்றை எழுதுவார் என்றும் உலக தடகள சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற இரண்டாவது இந்திய மற்றும் முதல் ஆடவர் என்ற சாதனையைப் படைப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கப் பதக்கத்திற்கான சோப்ராவின் முக்கிய போட்டியாளர் கிரெனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ். இவர் நடப்பு சாம்பியனாவார். பீட்டர்ஸ் இந்த சீசனில் முதல் ஐந்து வீசுதல்களில் நான்கு டாப் த்ரோக்களை தன் வசம் வைத்திருப்பதால் தங்கம் வெல்லும் வாய்ப்பு இவருக்கே அதிகம். அவரது சிறந்த முயற்சியான 93.07 இந்த சீசனிலும் சிறந்த தூரமாகும்.
அதே போல், தேசிய சாதனை படைத்த நீளம் தாண்டுதல் வீரரான முரளி ஸ்ரீசங்கர் ஏப்ரல் மாதம் ஃபெடரேஷன் கோப்பையின் போது தனது 8.36மீ முயற்சியுடன் சீசனின் கூட்டு இரண்டாவது இடத்தில் அமர்ந்திருப்பதால் அவர் பதக்கம் வெல்லவும் வாய்ப்பு உண்டு. அவர் வெள்ளிக்கிழமை (இந்தியாவில் சனிக்கிழமை அதிகாலை) தகுதிச் சுற்றுகளில் விளையாடுவார்.
Published by:Muthukumar
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.