Home /News /sports /

உலக தடகள போட்டிகள்: இறுதிக்குத் தகுதி பெற்றார் நீரஜ் சோப்ரா

உலக தடகள போட்டிகள்: இறுதிக்குத் தகுதி பெற்றார் நீரஜ் சோப்ரா

நீரஜ் சோப்ரா

நீரஜ் சோப்ரா

ஒலிம்பிக் தங்கமகன் வரலாற்று நாயகன் ஈட்டி எறிதல் சாம்பியனான நீரஜ் சோப்ரா, ஆரிகன் யூஜினில் நடைபெறும் உலகத் தடகள சாம்பியன் போட்டிகளில் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றார்.

    ஒலிம்பிக் தங்கமகன் வரலாற்று நாயகன் ஈட்டி எறிதல் சாம்பியனான நீரஜ் சோப்ரா, ஆரிகன் யூஜினில் நடைபெறும் உலகத் தடகள சாம்பியன் போட்டிகளில் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றார்.

    ஸ்டாக்ஹோமில் 89.34 மீ தூரம் விட்டெறிந்து புதிய தேசிய சாதனை படைத்த நீரஜ் சோப்ரா இன்று 88.39 மீ தூரம் எறிந்து இறுதிக்குத் தகுதி பெற்றார். அதன் வீடியோ இதோ:



    ஈட்டி எறிதலில் பங்கு பெற்ற இன்னொரு இந்திய வீரர் ரோஹித் யாதவ் குரூப் பி-யிலிருந்து போட்டியிடுகிறார் ஆனால் இவரது சிறந்த த்ரோவான 82.54 என்பது உலக தடகளப் போட்டிகளின் இறுதிக்குத் தகுதி பெறுவதற்கான 83.50 மீ வீசுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    டோக்கியோ ஒலிம்பிக் வெள்ளி வென்ற ஜேக்கப் வாட்லியிச் இறுதிக்குத் தகுதி பெற்றார், ஆனால் இவர் நீரஜ் சோப்ராவை விட குறைவாக 85.23மீ தூரம்தான் வீசினார்.

    மகளிர் பிரிவில் ஜாவ்லின் த்ரோவில் இந்தியாவின் அன்னு ரானி நாளை போட்டியிடுகிறார், இவரும் இறுதிக்குத் தகுதி பெறுவாரா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

    ஜூலை 24ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டிக்கு டாப் 12 வீரர்கள் போட்டியிடுவார்கள்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Neeraj Chopra, Sports

    அடுத்த செய்தி