2022 கத்தார் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் கடந்த உலகக் கோப்பையின் சாம்பியன் பிரான்ஸை பெனால்டி ஷூட் அவுட் முறையில் வீழ்த்தி அர்ஜெண்டினா அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த வரலாற்று வெற்றியின் மூலம்
உலகின் தலைசிறந்த கால்பந்து வீரரும் அர்ஜெண்டினா அணியின் கேப்டனுமான லியோனல் மெஸ்ஸி தனது உலகக் கோப்பை கனவை நனவாக்கியுள்ளார்.
35 வயதான மெஸ்ஸி கால்பந்து விளையாட்டில் பல்வேறு சாதனைகளை புரிந்திருந்தாலும் உலகக் கோப்பை கனவு மட்டுமே எட்டாக் கனவாக இருந்தது. இந்நிலையில், கத்தார் உலகக் கோப்பை தான் கடைசி உலகக் கோப்பை எனக் கூறி களமிறங்கிய மெஸ்ஸி, சொல்லி அடித்த கில்லியாக கோப்பை தன்வசப்படுத்தினார். இறுதி போட்டியில் இரு கோல்கள் அடித்ததுடன் தொடரின் சிறந்த வீரர் என்ற கோல்டன் பால் (Golden ball) விருதையும் அவர் வென்றுள்ளார்.
இந்த வெற்றிக்களிப்புடன் சர்வதேச போட்டிகளில் இருந்து மெஸ்ஸி ஓய்வு பெறப்போவதாக தகவல்கள் பரவின. இந்நிலையில், இந்த புரளிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமான தகவலை மெஸ்ஸி தெரிவித்துள்ளார். வெற்றிக்குப் பின் ஊடகத்தினருக்கு பேட்டி அளித்த மெஸ்ஸி, "நான் உலக சாம்பியனாக மேலும் சில போட்டிகளை விளையாட விரும்புகிறேன். எனது விளையாட்டு கேரியரில் அனைத்து பட்டங்களையும் நான் வென்றுவிட்டேன்.
இதையும் படிங்க: ஒரே போட்டி.. பல சாதனைகள்.. ஐரோப்பிய நாடுகளின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த அர்ஜெண்டினா!!
இதுவரை உலகக் கோப்பை மட்டுமே எட்டாக்கனியாக இருந்தது. தற்போது அதையும் நனவாக்கி, எனது நாட்டு மக்களுடன் அதை கொண்டாடவுள்ளேன்" என்றார். தான் தொடர்ந்து அணிக்காக விளையாடவுள்ளேன் என் மெஸ்ஸி கூறியதன் மூலம் அர்ஜெண்டினா ரசிகர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சி கொடுத்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Argentina, FIFA 2022, FIFA World Cup 2022