திடீரென கிடைத்த அதிர்ஷ்டம்: டோக்கியோ விரைந்த இந்திய வீராங்கனை!

தீஷா தாகர்

அயர்லாந்தில் மற்றொரு போட்டியில் பங்கேற்க சென்றிருந்த தீஷா தாகருக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து அவர் உடனடியாக டோக்கியோ புறப்பட்டு சென்றார்.

 • Share this:
  பிற நாட்டு வீராங்கனைகளின் விலகல் காரணமாக கிடைத்த வாய்ப்பையடுத்து இந்திய கோல்ஃப் வீராங்கனை தீஷா தாகர் டோக்கியோ சென்றுள்ளார். நாளைய தினம் அவர் பங்கேற்கும் ஆட்டம் நடைபெறுகிறது.

  2020ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பானில் டோக்கியோ நகரில் நடைபெற்று வருகிறது. ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் முடிவடைய இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ளன.  ஒலிம்பிக் கோல்ஃப் போட்டிகள் நாளை தொடங்குகின்றன.  இந்நிலையில், போட்டியில் பங்கேற்க இருந்த தென் ஆப்பிரிக்க மற்றும் ஆஸ்திரேலிய வீராங்கனைகள் கடைசி நேரத்தில் விலகினர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதையடுத்து அடுத்த இடத்தில் இருந்த இந்தியாவின் தீஷா தாகர், ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு அமைந்தது.  அயர்லாந்தில் மற்றொரு போட்டியில் பங்கேற்க சென்றிருந்த தீஷா தாகருக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து அவர் டோக்கியோ புறப்பட்டு சென்றார்.

  மேலும் படிக்க: ஊரே வியந்து பேசும் பி.வி.சிந்துவின் பயிற்சியாளர் யார்?.. Park Tae-Sang பற்றிய சுவாரஸ்ய தகவல்!
  அதிதீ அசோக்


  இந்தியாவின் மற்றொரு வீராங்கனையான அதிதீ அசோக்  உடன் தீஷா தற்போது இணைந்துள்ளார். அதிதீ அசோக் முதல் சுற்றில் நன்னா கோர்ஸ்ட்ஸ் மேட்சன் மற்றும் கியுலியா மோலினாரோ ஆகியோருடனும், தீக்ஷா கிம் மெட்ராக்ஸ் மற்றும் டோன்ஜே டாஃபின்ரூட் ஆகியோருடன்  விளையாடவுள்ளனர்.

  இதையும் படிக்க: ‘சக் தே இந்தியா’: மகளிர் ஹாக்கி வெற்றி குறித்து கோச் உற்சாகம்!

  Published by:Murugesh M
  First published: