Tokyo olympics: ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம்- பதக்கப்பட்டியலில் இந்தியாவின் இடம் என்ன?

பதக்கப் பட்டியல்

ஒரு வெள்ளிப் பதக்கத்துடன் புள்ளிப் பட்டியலில் இந்தியா பின்தங்கி இருந்த நிலையில், இன்றை போட்டியில் பி.வி.சிந்து வெண்கலம் வென்றது மூலம் டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் பதக்கங்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.

  • Share this:
    இன்றைய ஆட்டத்தில் பி.வி. சிந்து சீன வீராங்கனையை தோற்கடித்து வெண்கலப் பதக்கத்தை வென்றார். இதன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இதுவரை 2 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.

    ஜப்பான் தலைநகர் டோக்கியோவில்  கடந்த 23ம் தேதி ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி தொடங்கியது. இதில், பங்கேற்க  இந்தியா சார்பில் 125 வீரர்- வீராங்கனைகள் அனுப்பி வைக்கப்பட்டனர். ஒலிம்பிக் விளையாட்டு போட்டி முடிவு பெற இன்னும் 7 நாட்களே உள்ளன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்தியா சார்பில் மீராபாய் சானு பளுதூக்குதல் பிரிவில் வெள்ளி  பதக்கம் வென்று சாதனைப் படைத்தார். ஒரு வெள்ளி பதக்கத்துடன் புள்ளிப் பட்டியலில் பின் தங்கிய நிலையில் இந்தியா இருந்து வந்தது. இந்நிலையில், இன்று நடைபெற்ற ஆட்டத்தில் சீன வீராங்கனை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை பி.வி. சிந்து கைப்பற்றினார். ஒலிம்பிக் போட்டியில் பி.வி. சிந்து வெல்லும் இரண்டாவது பதக்கம் இதுவாகும்.

    இதையும் படிங்க: ஒலிம்பிக் பேட்மிண்டன்: வெண்கலப் பதக்கம் வென்றார் பி.வி. சிந்து! சீன வீராங்கனையை வீழ்த்தி மூன்றாம் இடம்


    இதையடுத்து, ஒரு வெள்ளி, ஒரு வெண்கலத்துடன்  கியூபா, போர்ட்சுகல், சான் மரினோ, உகண்டா ஆகிய நாடுகளுடன் இந்திய அணி புள்ளிப் பட்டியலில்  59வது இடத்தை பகிர்ந்துகொண்டுள்ளது. 23 தங்கப் பதக்கங்கள் உட்பட 50 பதக்கங்களுடன் சீனா முதல் இடத்தில் உள்ளது. அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா,  ரஷ்யன் ஒலிம்பிக் கமிட்டி ஆகியவை முறையே அடுத்தடுத்து இடங்களில் உள்ளன.

    மேலும் படிக்க:  ஒலிம்பிக்கில் பி.வி.சிந்து சாதனை வெற்றி: பிரதமர், குடியரசுத்தலைவர் வாழ்த்து!

    Published by:Murugesh M
    First published: