Roger Federer: Wimbledon 2021- ரோஜர் பெடரர் அதிர்ச்சித் தோல்வி: அரையிறுதியில் போலந்து வீரர் ஹர்காக்ஸ்

ரோஜர் பெடரர்.

விம்பிள்டன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் காலிறுதி ஆட்டத்தில் போலந்து வீரர் ஹியூபர்ட் ஹர்காக்ஸிடம் சுவிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரர் 6-3, 7-6, 6-0 என்று நேர் செட்களில் தோல்வியடைந்து வெளியேறினார்.

  • Share this:
    விம்பிள்டன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் காலிறுதி ஆட்டத்தில் போலந்து வீரர் ஹியூபர்ட் ஹர்காக்ஸிடம் சுவிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரர் 6-3, 7-6, 6-0 என்று நேர் செட்களில் தோல்வியடைந்து வெளியேறினார்.

    இதன் மூலம் 14ம் தரவரிசை போலந்து வீரர் ஹியூபர்ட் ஹர்காக்ஸ் அரையிறுதிக்குத் தகுதி பெற்றார்.

    பெடரர் தோற்றாலும் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக கரகோஷம் செய்தனர், இது வெற்றிக்கான கரகோஷம் அல்ல, மாறாக ‘நன்றி பெடரர்’ ’குட் பை’ பெடரர் ரக கைதட்டலாக இருந்தது.



    விம்பிள்டனில் பெடரரின் 22வது தோற்றமாகும் இது. 2020-ல் இருமுறை வலது முழங்கால் காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டார். 12 மாதங்கள் இதனால் மொத்தமாக டென்னிஸ் ஆடாமல் இருந்தார். இந்த சீசனில் மொத்தமே 8 போட்டிகளில் ஆடிய நிலையில்தான் விம்பிள்டனுக்கு வந்தார், முதல் சுற்றுப் போட்டியிலேயே கிரேட் எஸ்கேப் ஆனார் பெடரர்.

    Also Read:  Euro 2020 England vs Denmark| 55 ஆண்டுகளுக்கு பிறகு வரலாறு! டென்மார்க்கை வீழ்த்தி இறுதியில் நுழைந்த இங்கிலாந்து

    ஆகஸ்ட் 8ம் தேதி பெடரர் வயது 40. எனவே அவரது 30-ம்வயதுகளின் கடைசிப் போட்டியாக இது அமைந்தது. எனவே இந்த வயதில் அவரிடம் அதிகம் எதிர்பார்க்கக் கூடாது. இவர் செய்யாத சாதனைகளே இல்லை, அனைத்திற்கும் மேலாக இதுவரை டென்னிஸ் ஆட்டம் உருவாக்க முடியாத ஒரு தனித்துவ வீரர் என்று பண்டிதர்களால் புகழப்படுவது ஒன்று போதும் பெடரருக்கு.

    20 கிராண்ட்ஸ்லாம் டைட்டில்களை வென்றதன் டாப் ஷாட்கள் அவருக்கு இப்போது இவர் அழைதாலும் வர மறுக்கிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

    மாறாக எதிர்முனையில் ஆடிய போலந்து வீரர் ஹியூபர்ட் ஹர்காக்ஸ் இதுவரை எந்த மேஜர் தொடரிலும் 3வது சுற்றைத் தாண்டியதில்லை. முதல் செட்டில் ஒரு பிரேக் பாயிண்ட் பெடரர் கதையை முடிக்க, இரண்டாவது செட்டில் பெடரர் 3-0 என்று முன்னிலைப் பெற்றிருந்தார். ஆனால் அடுத்த 5 கேம்களில் ஹர்காக்ஸ் 4-ல் வென்று 4-4 என்று சமன் செய்தார். பிறகு ஒரு ஃபோர்ஹேண்ட் ரிட்டர்ன் ஷாட்டை பெடரர் பெக்ஹேண்ட்டில் அடிக்க பந்து வலையைத் தாக்க ஆட்டம் டைபிரேக்கருக்குச் சென்றது. டைபிரேக்கரில் ஹர்காக்ஸ் வென்று 2வது செட்டைக் கைப்பற்றினார், பெடரர் தன் பேலன்சையும் இழக்கத் தொடங்கியதைப் பார்க்க முடிந்தது.

    மூன்றாவது செட் பெடரர் தன் டென்னிஸ் வாழ்நாளில் மறக்க வேண்டியதானது 6-0 என்று தோற்றார். ரசிகர்களுக்கு கையை ஆட்டியபடியும் கட்டை விரலை உயர்த்திக் காட்டியும் பெடரர் வெளியேறிய போது அவரது ரசிகர்களுக்கு கண்களில் நிச்சயம் கண்ணீர் வந்திருக்கும்.

    மற்ற காலிறுதி ஆட்டங்களில் நோவக் ஜோகோவிச் மற்றும் டெனிஸ் ஷபவலோவ் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளானர்.
    Published by:Muthukumar
    First published: