Wimbledon 2022: 7 முறை விம்பிள்டன் சாம்பியன் செரீனா வில்லியம்ஸ் முதல் சுற்றிலேயே தோல்வி
Wimbledon 2022: 7 முறை விம்பிள்டன் சாம்பியன் செரீனா வில்லியம்ஸ் முதல் சுற்றிலேயே தோல்வி
செரீனா வில்லியம்ஸ்
நீண்ட இடைவெளிக்குப் பிறகு விம்பிள்டன் 2022-ல் ஒற்றையர் முதல் சுற்றில் ஆடிய அமெரிக்க மேதை டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், தரவரிசையிலேயே இல்லாத வீராங்கனை ஹார்மனி டான் என்பவரிடம் 7-5, 1-6, 7-6 (10/7) என்ற செட் கணக்கில் முதல் சுற்றிலேயே தோற்று வெளியேறினார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு விம்பிள்டன் 2022-ல் ஒற்றையர் முதல் சுற்றில் ஆடிய அமெரிக்க மேதை டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், தரவரிசையிலேயே இல்லாத வீராங்கனை ஹார்மனி டான் என்பவரிடம் 7-5, 1-6, 7-6 (10/7) என்ற செட் கணக்கில் முதல் சுற்றிலேயே தோற்று வெளியேறினார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிங்கிள்ஸ் ஆடுவதால் பலத்த ஆரவாரத்துடன் செரீனா உள்ளே நுழைந்தாலும் அவரது முதல் சர்வீசையே முறியடித்தார் ஹார்மனி டான். ஆனால் வில்லியம்சனிடம் பழைய ஆட்டத்தின் எச்ச சொச்சங்கள் இருந்தன, இதனால் ஒரு பிரேக் செய்து 2-2 என்று சமன் செய்தார்.
ஆனால் 11வது கேமில் டான் மீண்டும் செரீனா சர்வை முறியடித்தார். பிறகு தன்னுடைய பதற்றத்திலும் தன் சர்வை வென்று 7-5 என்று முதல் செட்டைக் கைப்பற்றினார். 2வது செட்டில் செரீனாவின் பழைய பார்ம் முழு வீச்சில் வந்தது இதனால் 6-1 என்று வெற்றி பெற்றார்.
23 முறை கிராண்ட் ஸ்லாம் வென்ற செரீனா வில்லியம்ஸ் 3வது செட்டில் முதலில் பிரேக் செய்தார், ஆனால் டான் மீண்டும் ஒரு அற்புதமான ஆட்டத்தில் செரீனாவை பிரேக் செய்ய 3-3 என்று சம நிலை எய்தியது. வில்லியம்ஸ் 9வது சர்வ்கேமை முறியடித்து வெற்றி பெருமிதம் அடைந்தார், ஆனால் மேட்சை வெல்வதற்கான சர்வில் தவறு செய்தார்.
ஆட்டம் டை பிரேக்கிற்கு சென்றது. அதில் செரீனா முதல் 4 சர்வ்களை வென்று டானுக்கு அதிர்ச்சியளித்தார். ஆனால் பிரான்ஸ் வீராங்கனை ஹார்மனி டான் தன் ஆட்டத்தில் ஆவி புகுந்தது போல் ஆடி அடுத்த 5 புள்ளிகளை வென்றார். கடைசியில் 10/7 என்று ஹார்மனி அதிர்ச்சியளித்து செரீனாவை வெளியேற்றினார்.
40வயது செரீனா இன்னும் ரசிகர்களின் அன்புக்குப் பாத்திரமானவர் 2018, 19, விம்பிள்டன் இறுதியில் நுழைந்தவர். இந்த ஆண்டு வைல்டு கார்டில் உள்ளே வந்தார் செரீனா. 23 கிராண்ட் ஸ்லாம் டைட்டில்களை வென்ற செரீனா மார்கரெட் கோர்ட்டின் அனைத்து கால சாதனையை முறியடிப்பதில் ஒன்றில் பின் தங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Muthukumar
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.