விம்பிள்டன்: ஆடவர் பிரிவில் ரோஜர் பெடரர் - ஜோகோவிச் இன்று பலப்பரீட்சை

இதுவரை இருவரும் 47 போட்டிகளில் சந்தித்துள்ளனர். அதில் 25 முறை ஜோகோவிச்சே வென்றிருந்தாலும், அரையிறுதியில் மற்றோர் ஜாம்பவானான ரபேல் நடாலை வீழ்த்திய தெம்புடன் ஜோகோவிச்சை சந்திக்கிறார் பெடரர்.

Web Desk | news18
Updated: July 14, 2019, 11:11 AM IST
விம்பிள்டன்: ஆடவர் பிரிவில் ரோஜர் பெடரர் - ஜோகோவிச் இன்று பலப்பரீட்சை
விம்பிள்டன் இறுதிப் போட்டி
Web Desk | news18
Updated: July 14, 2019, 11:11 AM IST
டென்னிஸ் உலகின் ஜாம்பவானான ரோஜர் பெடரர், லண்டனில் இன்று நடைபெறும் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் இறுதிப்போட்டியில் பட்டம் வெல்வாரா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

உலகில் மிக அதிகம் பேர் பார்க்கப்படும் விளையாட்டுகளில் டென்னிசும் ஒன்று. டென்னிஸில் பல போட்டிகள் நடைபெற்றாலும் கிராண்ட்ஸ்லாம் என்றழைக்கப்படும் போட்டிகளில் பட்டங்களை வெல்வதே வீரர், வீராங்கனைகளின் கனவாக உள்ளது.

விம்பிள்டன் - யு.எஸ். ஓபன் - பிரெஞ்சு ஓபன் மற்றும் ஆஸ்திரேலிய ஓபன் ஆகிய நான்கு போட்டிகளே கிராண்ட்ஸ்லாம் என்றழைக்கப்படுகின்றன.

கிராண்ட்ஸ்லாமை பொருத்தவரை நம்மூரில் லியாண்டர் பெயஸ், சானியா மிர்சா, மகேஷ்பூபதி ஆகியோரே இரட்டையர் பிரிவில் பட்டங்களை வென்றிருந்தாலும் தனிநபர் பட்டங்களை அவர்கள் வென்றதேயில்லை,

இந்த சூழலில் லண்டனில் இன்று நடைபெறும் விம்பிள்டன் இறுதிப்போட்டியில் 21-வது கிராண்ட்ஸ்லாமுக்கு குறிவைத்துள்ளார் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர்.

இதுவரை 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள பெடரர். கிராண்ட்ஸ்லாம்களிலேயே மிகவும் உயர்ந்ததாக கருதப்படும் விம்பிள்டன் பட்டத்தை 8 முறை வென்று சாதனை படைத்தவர்.

கிரிக்கெட்டில் சச்சினை கடவுள் என வர்ணித்ததை போல, டென்னிஸ்ஸில் பெடரரை வாழும் ஜாம்பவான் என 100 கோடி ரசிகர்கள் போற்றி வருகின்றனர்.
Loading...
இத்தகைய சிறப்பு வாய்ந்த ரோஜர் பெடரர் விம்பிள்டன் இறுதிப்போட்டியில் இன்று சந்திக்கவுள்ள செர்பிய வீரர் ஜோகோவிச் சாதாரணமானவர் அல்ல. கோமாளித்தனமான சேட்டைகளால் ஜோக்கர் என செல்லமாக அழைக்கப்படும் 32 வயது ஜோகோவிச் உலகின் நம்பர் ஒன் ஆட்டக்காரர் ஆவார்.

கடந்த ஆண்டில் இதே விம்பிள்டனில் பெடரரை வீழ்த்தி பட்டம் வென்றவர். 15 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும், 4 விம்பிள்டன் பட்டங்களையும் வென்றவர். அதனால் போட்டி கடுமையாக இருக்கும் என சொல்லத் தேவையில்லை.

இதுவரை இருவரும் 47 போட்டிகளில் சந்தித்துள்ளனர். அதில் 25 முறை ஜோகோவிச்சே வென்றிருந்தாலும், அரையிறுதியில் மற்றோர் ஜாம்பவானான ரபேல் நடாலை வீழ்த்திய தெம்புடன் ஜோகோவிச்சை சந்திக்கிறார் பெடரர்.

தனது உலக சாதனையை முறியடித்து 9-வது விம்பிள்டன் பட்டத்தையும், 21வது கிராண்ட்ஸ்லாமையும் வெல்வாரா பெடரர்? பெரும்பாலான டென்னிஸ் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதுதான்.

Also watch: ’குடிநீர் வேண்டுமா..’ ’குடும்பம் நடத்த வா’.. பெண்களுக்கு பாலியல் வலைவீசிய அரசு ஊழியர்கள்

First published: July 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...