விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ரோஜர் ஃபெடரரை வீழ்த்தி ஜோகோவிச் சாம்பியன்!

16-வது கிராண்ட்ஸ்லாம் வென்ற ஜோகோவிச்.

Web Desk | news18
Updated: July 15, 2019, 8:57 AM IST
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ரோஜர் ஃபெடரரை வீழ்த்தி ஜோகோவிச் சாம்பியன்!
ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்
Web Desk | news18
Updated: July 15, 2019, 8:57 AM IST
விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் ரோஜர் ஃபெடரரை வீழ்த்தி, ஜோகோவிச் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டார்.

கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் மிகவும் பழமையான விம்பிள்டன் டென்னிஸ் லண்டன் நகரில் நடைபெற்றது. இதன், ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் செர்பியாவின் ஜோகோவிச், சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் பலப்பரீட்சை நடத்தினர்.

தரவரிசையில் முதல் 2 இடங்களில் உள்ள சமபலம் வாய்ந்த வீரர்கள் நேருக்கு நேர் மோதியதால், பரஸ்பரம் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால், முதல் செட், 'டை' பிரேக்கர் வரை சென்றது. இருந்த போதும், சற்று ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச் முதல் செட்டை போராடி வசப்படுத்தினார்.


இதையடுத்து சுதாரித்துக்கொண்ட ஃபெடரர், 2-வது செட்டை எளிதாக வசப்படுத்தி பதிலடி கொடுத்தார்.4 செட்களின் முடிவில், இருவரும் தலா 2 செட்களை வசப்படுத்தி சமநிலையை எட்டினர்.

ரோஜர் ஃபெடரர்-ஜோகோவிச்


பின்னர், வெற்றியை தீர்மானிக்க கூடிய கடைசி செட்டில் விறுவிறுப்பு கூடியது. இதில், சிறப்பாக செயல்பட்ட ஜோகோவிச், ஃபெடரரை வீழ்த்தினார். சுமார் 5 மணி நேரத்துக்கு மேல் நடைபெற்ற இப்போட்டியில், 7-6, 1-6, 7-6, 4-6, 13-12 என்ற செட்கணக்கில் போராடி வெற்றிபெற்றார்.

Loading...

ஜோகோவிச்


இதன் மூலம், விம்பிள்டன் டென்னிசில் தொடர்ந்து 2-வது முறையும், ஒட்டுமொத்தத்தில் 5-வது தடவையும் பட்டத்தை முத்தமிட்டார் ஜோகோவிச். ஒட்டுமொத்தத்தில் அவருக்கு 16-வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகவும் இது அமைந்தது.

மேலும் படிக்க... நியூசிலாந்து அணியில் தோனியை சேர்த்துகொள்வீர்களா....? வில்லியம்சன் பதில்!





அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: July 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...