நாட்டுக்காக என்றுமே சிறப்பாக ஆடுவேன்: பத்மஸ்ரீ தங்கமகன் நீரஜ் சோப்ரா
நாட்டுக்காக என்றுமே சிறப்பாக ஆடுவேன்: பத்மஸ்ரீ தங்கமகன் நீரஜ் சோப்ரா
பத்ம ஸ்ரீ நீரஜ் சோப்ரா
மொத்தம் 128 பேருக்கு, பல்வேறு பிரிவுகளின் கீழ் இந்த உயரிய விருதுகள் வழங்கப்படுகின்றன. இதில் ஒலிம்பிக் தங்கம் வென்ற ஈட்டி எறிதல் விளையாட்டு வீரர் நீரஜ் சோப்ராவுக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. இவருக்கு பரம் விசிஷ்ட் சேவா பதக்கமும் அளிக்கப்பட்டது.
மொத்தம் 128 பேருக்கு, பல்வேறு பிரிவுகளின் கீழ் இந்த உயரிய விருதுகள் வழங்கப்படுகின்றன. இதில் ஒலிம்பிக் தங்கம் வென்ற ஈட்டி எறிதல் விளையாட்டு வீரர் நீரஜ் சோப்ராவுக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. இவருக்கு பரம் விசிஷ்ட் சேவா பதக்கமும் அளிக்கப்பட்டது.
கடந்தாண்டு டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் தொடரின் ஈட்டி எறிதல் போட்டியில் பங்கேற்ற நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். அபினவ் பிந்த்ராவுகுக்கு அடுத்தபடியாக ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற 2வது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். இதனையடுத்து நீரஜுக்கு பரிசு மழை குவிந்து வந்த நிலையில் தற்போது நாட்டின் உயரிய விருதான பத்ம ஸ்ரீ அறிவிக்கப்பட்டுள்ளது.
இவருடன் சேர்த்து சுமித் அண்டில், பிரமோத் பாஹட், அவானி லெகஹரா, ஃபைசல் அலி, சங்கரநாராயண மேனன், பிரமானந்த் சன்ங்கல்வார், வந்தனா கட்டாரியா என மொத்தம் 8 பேருக்கு விளையாட்டு துறையின் கீழ் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பத்ம பூஷன் இதே போல பாராலிம்பிக்கில் தங்கம் வென்று அசத்திய தேவ்ந்த்ரா ஜாஜ்ஹரியாவுக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பாரலிம்பிக்கில் 2 தங்கப்பதங்களை வென்ற முதல் இந்தியர் இவரே ஆகும். இவர்களுக்கு குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் இந்த விருதுகள் வழங்கப்படும். பரம் விசிஷ்ட் சேவா விருது முன்னதாக இன்று மாலை நீரஜ் சோப்ராவுக்கு பரம் விசிஷ்ட் சேவா விருது அறிவிக்கப்பட்டிருந்தது. நீரஜ் இந்திய ராணுவத்தில் சுபேதாராக பணியாற்றி வருகிறார். இதனையடுத்து அவருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
செவ்வாயன்று பரம் விசிஷ்ட் சேவா பதக்கம் மற்றும் பத்மஸ்ரீ விருதுகளை வழங்கிய பிறகு, நீரஜ் சோப்ரா இந்தியர்களின் ஆதரவு மற்றும் ஆசிகளுக்காக சமூக ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்தார்.
“பத்மஸ்ரீ விருது மற்றும் பரம் விசிஷ்ட் சேவா பதக்கம் வழங்கப்பட்ட செய்தியைக் கேட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்" என்று நீரஜ் சோப்ரா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
“உங்கள் ஆதரவு மற்றும் ஆசீர்வாதங்களுக்கு உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. எனது கடின உழைப்பும் முயற்சியும் எப்போதும் எனது நாட்டிற்கு சிறந்த செயல்திறனை வழங்கும்.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.