Home /News /sports /

இளையோர் பளுதூக்குதல்: 16 வயதேயான வீரர் குருநாயுடு சனாபதி உலக சாம்பியன்

இளையோர் பளுதூக்குதல்: 16 வயதேயான வீரர் குருநாயுடு சனாபதி உலக சாம்பியன்

இளையோர் பளுதூக்குதல் உலக சாம்பியன் சனாபதி

இளையோர் பளுதூக்குதல் உலக சாம்பியன் சனாபதி

மெக்சிகோவின் லியான் நகரில் நடைபெற்ற உலக இளையோர் பளுத் தூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று இந்திய வீரர் குருநாயுடு சனாபதி சாதனை புரிந்துள்ளார்.

    மெக்சிகோவின் லியான் நகரில் நடைபெற்ற உலக இளையோர் பளுத் தூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று இந்திய வீரர் குருநாயுடு சனாபதி சாதனை புரிந்துள்ளார்.

    இவர் 230 கிலோ எடைத் தூக்கி ஆண்களுக்கான 55 கிலோ உடல் எடைப்பிரிவில் சாதனை புரிந்து தங்கம் வென்றார்.

    குருநாயுடு சனாபதி 'ஸ்னாட்ச்' முறையில் 104 கிலோவும், 'கிளீன் அண்ட் ஜெர்க்' முறையில் 126 கிலோவும் என மொத்தம் 230 கிலோ எடைதூக்கி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். இதன் மூலம் உலக இளையோர் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.

    இந்த போட்டியில் சவுதி அரேபியா வீரர் அலி மஜீத் மொத்தம் 229 கிலோ எடை தூக்கி வெள்ளிப்பதக்கமும், கஜகஸ்தானின் யேராஸ்சி உம்ரோவ் மொத்தம் 224 கிலோ எடை தூக்கி வெண்கலப்பதக்கமும் பெற்றனர். பெண்களுக்கான 45 கிலோ எடைப்பிரிவில் மராட்டிய வீராங்கனை சவுமியா தல்வி 'ஸ்னாட்ச்' முறையில் 65 கிலோவும், 'கிளீன் அண்ட் ஜெர்க்' முறையில் 83 கிலோவும் என மொத்தம் 148 கிலோ எடைதூக்கி வெண்கலப்பதக்கம் வென்றார்.

    இதில் பிலிப்பைன்ஸ் வீராங்கனை ரோஸ் ரமோஸ் (155 கிலோ) தங்கப்பதக்கமும், வெனிசுலா வீராங்கனை கெர்லி மொன்டிலா (153 கிலோ) வெள்ளிப்பதக்கமும் தட்டிச் சென்றனர். மற்றொரு இந்திய வீராங்கனை பவானி (132 கிலோ) 8-வது இடம் பெற்றார். இந்த போட்டியில் இந்தியா இதுவரை ஒரு தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 4 பதக்கங்கள் வென்று இருக்கிறது.

    குருநாயுடு சனாபதி 2020 ஆசிய சாம்பியன்ஷிப் யூத் போட்டிகளிலும் வெண்கலம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது,இதில் தொடக்க நாளில் அகன்ஷா கிஷோர் வியாவ்ஹாரே, மற்றும் விஜய் பிரஜாபதி வெள்ளிப்பதக்கங்களை வென்றது குறிப்பிடத்தக்கது.

    கடந்த ஆண்டு சவுதி அரேபியா ஜெட்டாவில் நடைபெற்ற இதே இளையோர் போட்டிகளில் இந்தியா பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Athlete

    அடுத்த செய்தி