Home /News /sports /

WC Qualifiers | ‘போங்கு’ நடுவர்களால் ஈக்வடார் வெற்றியை மோசடி செய்த பிரேசில் - ஆட்டம் டிரா

WC Qualifiers | ‘போங்கு’ நடுவர்களால் ஈக்வடார் வெற்றியை மோசடி செய்த பிரேசில் - ஆட்டம் டிரா

ஈக்வடா வீரர் தலையில் பூட் காலால் உதைக்கும் பிரேசில் கோல் கீப்பர், ஆனால் ரெட் கார்டிலிருந்து தப்பினார்.

ஈக்வடா வீரர் தலையில் பூட் காலால் உதைக்கும் பிரேசில் கோல் கீப்பர், ஆனால் ரெட் கார்டிலிருந்து தப்பினார்.

ஈக்வடாரில் உள்ள குயிட்டோவில் நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து தகுதிச் சுற்றுப் போட்டி ஒன்றில் பிரேசில் கோல்கீப்பர் அலிசன் பெக்கர் இரண்டு சிவப்பு அட்டைகளை வாங்கியும் VAR என்ற ரிவியூ மூலம் அவற்றை முறியடித்தார், பிரேசில் வியாழன் அன்று ஈக்வடாருடன் சர்ச்சைக்குரிய முறையில் 1-1 என்று ட்ரா செய்தது. இரு அணிகளிலும் தலா ஒரு வீரர் வெளியேற்றப்பட்டனர்.

இந்த ஆட்டத்தில் 4 முறை விஏஆர் மேல்முறயீடு பிரேசிலுக்கு சாதகமாக அமைந்ததோடு இருமுறை ஈக்வடார் பெனால்டி வாய்ப்பும் பறிபோனது, ஆகவே போங்காட்டம் ஆடி பிரேசில் ட்ரா செய்தது.

இந்த ஆட்டம் கடும் சர்ச்சைகளுக்குள்ளானது, நடுவர்கள் வெளிப்படையாகவே பிரேசில் அணிக்கு ஆதரவாகச் செயல்பட்டதால் ஈக்வடார் அணி கடுமையாகப் பாதிக்கப்பட்டது. முதல் பாதியில் நேராக சிவப்பு அட்டைக்குப் பிறகு அலிசன் தன்னை அதிர்ஷ்டசாலி என்று தான் கருத வேண்டும். ஈக்வடார் வீரர் என்னர் வலென்சியா மீது தன் பூட் காலால் உதைக்கப்பார்த்தார் இதற்கான ரெட் கார்டு பிறகு விஏஆர் முறையீட்டின்மூலம் மஞ்சள் அட்டையாக குறைக்கப்பட்டது. பின்னர் காய நேரத்தின் வாங்கிய இரண்டாவது மஞ்சள் அட்டையும் விஏஆர் மூலம் முறையடிக்கப்பட்டது.

ஈக்வடார் நான்கு VAR முறையீடுகளும் தங்களுக்கு எதிராகச் சென்றது கண்டு கடும் கோபமடைந்தனர். அதில் இரண்டு சாத்தியமான வெளியேற்றங்களைச் சரிபார்க்க மேற்கொள்ளப்பட்டது மற்ற இரண்டு ரிவியூக்கள் பெனால்டிகளுக்காக அளிக்கப்பட்டது. கொலம்பிய நடுவர் வில்மர் ரோல்டன் வழங்கியது, இவை அனைத்தும் ரிவியூவில் பிரேசிலுக்குச் சாதகமாக ஈக்வடாருக்கு எதிராகச் சென்றன.

காயம்பட்ட நெய்மருக்குப் பதிலாக ஆடிய பிரேசிலின் காஸ்மிரோ ஒரு கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். ஆனால் ஈக்வடார் சென்டர்-பேக் பெலிக்ஸ் டோரஸ் 15 நிமிடங்களில் சமன் செய்தார். சமன் செய்த 2 நிமிடங்களில் ஈக்வடார் 2வது கோலை அடித்திருக்க வேண்டும், ஆனால் பெர்விஸ் எஸ்டுபினனின் ஃப்ரீ கிக், அங்கு மார்க் செய்யப்படாமல் இருந்த வாலென்சியாவிடம் வர வாய்ப்பைக் கோட்டை விட்டார்.

போட்டியின் ஆரம்பமே பரபரப்புதான். எமர்சன் ராயல் 2 மஞ்சள் அட்டைகளை வாங்கி வெளியேறினார். இது நடந்து 5 நிமிட இடைவெளியில் பிரேசில் கோல் கீப்பர் அலிசன் இதே போன்ற ஒரு தவறுக்காக ரெட் கார்டு காட்டப்பட்டார். பிறகு ஈக்வடார் வீரர் வாலென்சியாவின் தலையில் தன் பூட் கால் படுமாறு ஒரு ஆட்டத்தை ஆட நேரடியாக ரெட் கார்டு, ஆனால் விஏஆர் ரிவியூவில் அதிர்ச்சிகரமாக அது மஞ்சள் அட்டையாகக் குறுக்கப்பட்டது.

இரண்டாவது பாதியின் தொடக்கத்தில், வலென்சியாவுக்கு கோல் அடிக்க மற்றொரு அற்புதமான வாய்ப்பு கிடைத்தது, ஆனால் மீண்டும் பாக்ஸில் இடம் கிடைத்த பிறகு 12 கெஜம் தூரத்தில் இருந்து அவரது ஷாட் வைடாகச் சென்றது. மறுமுனையில், பிரேசிலின் குன்ஹா இரண்டாவது முயற்சியில் நூலிழையில் கோலை இழந்தார். வைடாக அடித்து விட்டார்.

ஈக்வடார் அணி இரண்டாவது பாதியின் தொடக்கத்தில் ஆக்ரோஷமாக ஆடியது. மைக்கேல் எஸ்ட்ராடா பந்தை வலைக்குள் செலுத்தினார். ஆனால் பந்தை அவர் அடிக்கும் போது நடுவர் விசில் அடித்து பந்து ஆட்டத்திலேயே இல்லை என்று லைன்ஸ் நடுவர் தெரிவிக்க இதுவும் பிரேசிலுக்குச் சாதகமானது.

மீண்டும் ஒருமுறை ஈக்வடார் கோல் முயற்சியில் பிரேசில் பகுதிக்குள் நுழைய பிரேசில் வீரர் ராபின்யா ஈக்வடார் வீரர் காலில் மேல் நின்றதால் பெனால்டி கொடுக்கப்பட்டது. ஆனால் 3வது முறையாக பிரேசிலுக்கு ஆதரவாக மேல்முறையீட்டு நடுவர் செயல்பட்டு பெனால்டியை இல்லை என்று அறிவித்தார்.

கடைசியில் காயத்திற்காக ஒதுக்கப்பட்ட ஈடுகட்டும் நேரத்திலும் பிரேசில் கோல் கீப்பர் செய்த மிகப்பெரிய தவறுக்கான மஞ்சள் அட்டை மற்றும் ஈக்வடாருக்கான பெனால்டி வாய்ப்பும் மேல்முறையீட்டில் இல்லை என்று மறுக்கப்பட முற்று முழுதும் பிரேசில் போங்கு ஆட்டத்தில் டிரா செய்தது, இல்லையெனில் தோற்றிருக்கும்.
Published by:Muthukumar
First published:

Tags: Brazil, Football

அடுத்த செய்தி