குட்டி மீராபாய் சானு: இன்ஸ்பிரேஷன்னா இதுதான் - சானுவை அசத்திய சிறுமியின் வைரல் வீடியோ

மீராபாய் சானுவை அப்படியே இமிடேட் செய்த குழந்தை.

டோக்கியோ ஒலிம்பிக்கில் 49 கிலோ உடல் எடைப்பிரிவில் பளுத்தூக்குதலில் வெள்ளிப் பதக்கம் வென்று வரலாறு படைத்த மணிப்பூரைச் சேர்ந்த இந்தியாவின் மீராபாய் பானுவை அப்படியே இமிடேட் செய்த சிறுமியின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

 • Share this:
  டோக்கியோ ஒலிம்பிக்கில் 49 கிலோ உடல் எடைப்பிரிவில் பளுத்தூக்குதலில் வெள்ளிப் பதக்கம் வென்று வரலாறு படைத்த மணிப்பூரைச் சேர்ந்த இந்தியாவின் மீராபாய் பானுவை அப்படியே இமிடேட் செய்த சிறுமியின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

  இந்த வீடியோவில் பின்னணியில் மீராபாய் சானு டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற அந்த பளுத்தூக்கும் வீடியோ ஓடிக்கொண்டிருக்க கையில் பவுடரை எடுத்துப் பூசிக் கொண்ட அந்த சிறுமி மீராபாய் போலவே பளுத்தூக்கி அவர் வென்றவுடன் கையை உயர்த்தியது போலவே உயர்த்தி அசத்தியுள்ளார்.  இந்த வீடியோவை சதீஷ் சிவலிங்கம் என்ற பளுதூக்கும் வீரர் பகிர்ந்து வாசகத்தில், “ஜூனியர் மீராபாய் சானு இதுதான் இன்ஸ்பிரேஷன்” என்று பதிவிட்டுள்ளார்.  இந்த வீடியோ வெள்ளி மங்கை மீராபாய் சானுவின் கவனத்தையும் ஈர்க்க அவரும் அதைப் பகிர்ந்து “So cute. Just love this” என்று பதிவிட்டுள்ளார்.

  திங்கள் மாலை மீராபாய் சானு இந்தியா திரும்பியதையடுத்து அவருக்கான பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு இதில் கலந்து கொண்டார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Also Read: காலால் கேரம் ஆடும் மாற்றுத் திறனாளி: சச்சின் பகிர்ந்த வைரல் வீடியோ
   சானுவுக்கு மணிப்பூர் அரசு போலீஸ் ஏ.எஸ்.பி பதவி கொடுத்து கவுரவித்துள்ளது, ரயில்வே நிர்வாகம் இவருக்கு ரூ.2 கோடி பரிசி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

   

  இந்நிலையில் சானுவை இமிடேட் செய்த சிறுமியின் வீடியோ வைரலாகி வருகிறது.
  Published by:Muthukumar
  First published: