மைதானத்தில் 40 அடி உயர கேலரியிலிருந்து தவறி விழுந்த சிறுமி - வீடியோ

மைதானத்தில் 40 அடி உயரத்திலிருந்த கேலரியின் தடுப்புக்கு அருகில் 13 வயது சிறுமி உற்சாகமாக ஆடிக் கொண்டிருந்தார்.

Vijay R | news18-tamil
Updated: September 3, 2019, 6:20 PM IST
மைதானத்தில் 40 அடி உயர கேலரியிலிருந்து தவறி விழுந்த சிறுமி - வீடியோ
மைதானத்தில் தவறி விழுந்த சிறுமி
Vijay R | news18-tamil
Updated: September 3, 2019, 6:20 PM IST
கால்பந்து மைதானத்தில் போட்டியை பார்த்து கொண்டிருந்த சிறுமி ஒருவர் உற்சாக மிகுதியில் 40 அடி உயரம் கொண்ட கேலரியிலிருந்து தவறி கீழே விழுந்துள்ளார்.

பிரேசில் நாட்டின் சாவ் பாலோ நகரில் மொரும் கால்பந்து மைதானத்தில் சாவ் பாலே - ஜெரிமோ அணிகள் மோதின. சாவ் பாலோ அணிக்கு உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு அதிகமாக இருந்தது. இரு அணிகளும் ஆவேசமாக விளையாடி கொண்டிருந்தனர்.

பரபரப்பாக நடைபெற்று கொண்டிருந்த இந்த போட்டியில் கால்பந்து வீரர்களை ரசிகர்கள் உற்சாகப்படுத்தி கொண்டிருந்தனர். அப்போது மைதானத்தில் 40 அடி உயரத்திலிருந்த கேலரியின் தடுப்புக்கு அருகில் 13 வயது சிறுமி உற்சாகமாக ஆடிக் கொண்டிருந்தார்.


திடீரென யாரும் எதிர்பார்க்காத விதத்தில் சிறுமி கால் தவறி கீழே விழுந்துள்ளார். உடனடியாக அங்கிருந்தவர்கள் சிறுமியை சிகிச்சைக்காக அருகிலிருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.40 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்த சிறுமி அதிர்ஷ்டவசமாக சிறுகாயங்களுடன் தப்பி உள்ளார். இந்த சம்பவம் மைதானத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Also Watch

First published: September 3, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...