காலால் கேரம் ஆடும் மாற்றுத் திறனாளி: சச்சின் பகிர்ந்த வைரல் வீடியோ

காலால் கேரம் விளையாடும் மாற்றுத் திறனாளி.

சச்சின் டெண்டுல்கர் தன் ட்விட்டர் பக்கத்தில் மாற்றுத் திறனாளி ஒருவர் தன் காலினால் கேரம் விளையாடிய வைரல் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

 • Share this:
  கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றவர்களின் உத்வேகத்தை தூண்டும் விதமாக சில பாசிட்டிவ் ஆன போஸ்ட்களை தன் சமூக ஊடகப் பக்கங்களில் இடுவது வழக்கம்.

  திங்களன்று அந்த வகையில் சச்சின் பகிர்ந்த வைரல் வீடியோவில் மாற்றுத் திறனாளி ஒருவர் தன் காலால் கேரம் போர்டு விளையாடியது அனைவருக்கும் ஆச்சரியத்தையும் சோகத்தையும் ஒருசேர எழுப்பியது.

  சச்சின் டெண்டுல்கர் வீடியோவை பகிர்ந்து அதில் “Here's Harshad Gothankar who chose i-m-POSSIBLE as his motto,” என்ற வாசகத்தையும் பதிவிட்டுள்ளார்.  ஹர்ஷத் கோதாங்கர் என்ற அந்த மாற்றுத்திறனாளி நபர் ஒரு அறையில் தன் நண்பர்களுடன் கேரம் விளையாடினார், ஆனால் காலால் விளையாடியதுதான் அதிசயம்.

  மேலும், “சாத்தியமற்றதற்கும் சாத்தியத்துக்குமான வித்தியாசம் ஒருவரது உறுதிப்பாட்டைப் பொறுத்தது” என்கிறார் சச்சின் டெண்டுல்கர்.

  Also Read: Tokyo Olympics | இந்தியாவுக்கு இன்னொரு பதக்க வாய்ப்பு: காலிறுதியில் பாக்சிங் வீராங்கனை லவ்லினா

  மாற்றுத் திறனாளியின் இந்த அதிசயத் திறனை விதந்தோதிய சச்சின், “சாத்தியமாகக் கூடியதை நோக்கிய அவரது முயற்சியை நேசிக்கிறேன். இதிலிருந்து நாம் அனைவரும் பாடம் கற்றுக் கொள்ளலாம்” என்கிறார் சச்சின்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்த கிளிப்பை சச்சின் போஸ்ட் செய்தவுடன் 86,000 பேர் அதைப் பார்த்துள்ளனர். 12,000 லைக்குகள் விழுந்துள்ளன.

  நெட்டிசன்கள் பலரும் இந்த பாசிட்டிவ் வீடியோவைப் பகிர்வதோடு பாராட்டுதல்களையும் அள்ளி வழங்கி வருகின்றனர்.
  Published by:Muthukumar
  First published: