ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

Watch: கோல் அடித்தபோது கொண்டாடிய குடும்பம்.. வீடியோவை பார்த்து நெகிழ்ந்த மெஸ்ஸி.. வைரல் வீடியோ!

Watch: கோல் அடித்தபோது கொண்டாடிய குடும்பம்.. வீடியோவை பார்த்து நெகிழ்ந்த மெஸ்ஸி.. வைரல் வீடியோ!

லியோனல் மெஸ்ஸி

லியோனல் மெஸ்ஸி

மெஸ்ஸியை பேட்டி எடுத்த தொலைக்காட்சி நிருபர் குடும்பத்தினர் ஆர்ப்பரித்து கொண்டாடும் வீடியோவை மெஸ்ஸிக்கு செல்போனில் போட்டு காண்பித்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • inter, IndiaDohaDohaDoha

2022 பிபா உலகக் கோப்பை போட்டி வளைகுடா நாடான கத்தாரில் நடைபெற்று வருகிறது. உலகின் முன்னணி அணிகள் மோதும் இந்த போட்டித்தொடர் தற்போது பரபரப்பான நாக்அவுட் சுற்றை எட்டியுள்ளது. உலகின் முன்னணி நட்சத்திர வீரர் மெஸ்ஸியின் அர்ஜெண்டினா அணி ஆஸ்திரேலியா அணியை ரவுண்ட் ஆப் 16 போட்டியில் எதிர்கொண்டது.

இந்த போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினா வெற்றி பெற்று, காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. இந்த போட்டியில் நட்சத்திர வீரர் மெஸ்ஸி அபாரமான கோல் ஒன்றை அடித்து அணியின் வெற்றிக்கு வழி வகுத்தார். அத்துடன் அந்த போட்டி மெஸ்ஸியின் 1,000ஆவது போட்டி என்பது கூடுதல் சிறப்பு. இந்த போட்டியை மெஸ்ஸியின் மனைவி ஆன்டோனெலா, அவரது மூன்று மகன்கள் தியாகோ, மேடோ, கைரோ ஆகியோர் மைதானத்தில் ஆர்வத்துடன் கண்டு களித்தனர்.

மெஸ்ஸி கோல் அடித்தபோது அவர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் ஆராவாரம் செய்து கொண்டாடினர். இந்த காட்சிகள் வீடியோ பதிவுகளாக உள்ள நிலையில், போட்டி முடிந்த உடன் மெஸ்ஸியை பேட்டி எடுத்த தொலைக்காட்சி நிருபர் குடும்பத்தினர் ஆர்ப்பரித்து கொண்டாடும் வீடியோவை மெஸ்ஸிக்கு செல்போனில் போட்டு காண்பித்தார்.

மனைவியும், மகன்களும் தனது கோலை கொண்டாடும் அந்த காட்சியை மெஸ்ஸி மகிழ்ச்சியுடன் பார்த்து ரசித்தார். இது மிகவும் உன்னதமான உணர்வு என்று கூறிய மெஸ்ஸி, இந்த நொடிகளை அவர்களுடன் இணைந்து கொண்டாடுவதை ஆனந்தமாக உணர்கிறேன் என்றார். மெஸ்ஸியின் இந்த ரியாக்ஷன் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மெஸ்ஸியின் ரசிகர்கள் இந்த வீடியோவை லைக் செய்து ஆர்வமாக பகிர்ந்து வருகின்றனர். வரும் 10ஆம் தேதி அன்று அர்ஜென்டினா அணி காலிறுதிப்போட்டியில் நெதர்லாந்து அணியை எதிர்கொள்கிறது.

First published:

Tags: Argentina, FIFA 2022, FIFA World Cup 2022, Viral Video