கத்தாரில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் அர்ஜெண்டினா அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதன் மூலம் உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான மெஸ்ஸிக்கு உலகக் கோப்பை கனவு நனவாகியுள்ளது . ஏழு முறை பாலன் டி ஆர் விருது எனக் கால்பந்தில் அனைத்து கோப்பைகளையும் வென்றுள்ள மெஸ்ஸிக்கு உலகக் கோப்பை என்பது எட்டாக்கனியாக இருந்துவந்தது. அதைத் தனது 35ஆவது வயதில் வென்று வரலாற்றில் இடம் பிடித்துள்ளார் மெஸ்ஸி.
இறுதிப்போட்டியில் 2 கோல்கள் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக மெஸ்ஸி இருந்தார் என்பதும் கூடுதல் சிறப்பு. மேலும், உலகக் கோப்பையில் 5 போட்டிகளில் ஆட்டநாயகன் விருது வென்ற ஒரே வீரர் என்ற மகத்தான சாதனையை மெஸ்ஸி படைத்தார். இதன் மூலம், கத்தார் உலகக் கோப்பையில் சிறந்த வீரருக்கான தங்கப் பந்து (Golden Ball) விருதையும் அவர் வென்றார். 2014-ஐ தொடர்ந்து இரண்டாவது முறை GOLDEN BALL விருதை முத்தமிட்டார் மெஸ்ஸி.
இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக அர்ஜெண்டினா அணியின் கேப்டன் என்ற முறையில் மெஸ்ஸி அணியின் கனவு உலகக் கோப்பையை தூக்கிக் கொண்டாடினார். கத்தார் ஆட்சியாளரும் பிபா கூட்டமைப்பின் தலைவர் இருவரும் இணைந்து மெஸ்ஸிக்கு அரபிய அங்கியான bishtஐ அணிவித்து உலகக் கோப்பையை வழங்கினர். மெஸ்ஸிக்கு அணிவிக்கப்பட்ட இந்த அங்கி புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது. மெஸ்ஸியை கவுரவிக்கும் விதமாகவே இந்த அங்கி அவருக்கு அணிவிக்கப்பட்டது.
The moment he's dreamed about 🏆 pic.twitter.com/xGq3thFQvI
— FIFA World Cup (@FIFAWorldCup) December 18, 2022
அரபு நாடுகளில் மிக முக்கியஸ்தர்களுக்கு மட்டுமே இந்த அங்கி மரியாதை வழங்கப்படும். இருந்தாலும் தங்கள் அணியின் ஜெர்சியே ஒரு வீரருக்கு உயிர் போன்றதாகும். தங்கள் அணியை தங்கள் நாட்டை அடையாளப்படுத்தும் ஜெர்சியை மறைக்கும் விதமாக அதன் மேல் இந்த சிறப்பு அங்கியை அணிவித்ததை ஏற்க முடியாது எனப் பலரும் கருத்து தெரிவித்து விமர்சித்து வருகின்றனர். அதேவேளை, மெஸ்ஸி கோப்பையை பரிசாக பெற்ற பின்னரும் தனக்கு வழங்கப்பட்ட அந்த கவுரவத்தை மதிக்கும் விதமாக அங்கியை கழுட்டாமல் வெற்றிகொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Argentina, FIFA 2022, FIFA World Cup, FIFA World Cup 2022