ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

WATCH - மனம் உருகி புகழ்ந்த நிருபர்.. அழுகை தொண்டையை அடைக்க நெகிழ்ந்து நின்ற மெஸ்ஸி!

WATCH - மனம் உருகி புகழ்ந்த நிருபர்.. அழுகை தொண்டையை அடைக்க நெகிழ்ந்து நின்ற மெஸ்ஸி!

லியோனல் மெஸ்ஸி

லியோனல் மெஸ்ஸி

உலகக் கோப்பை இறுதிப் போட்டியுடன் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக கேப்டன் மெஸ்ஸி அறிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • inter, IndiaDohaDohaDohaDoha

உலகின் உட்சபட்ச விளையாட்டுத் திருவிழாவான உலகக் கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் நடைபெற்று வருகிறது.போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை நிகழ்த்தியுள்ளது. இந்த உலகக் கோப்பை கால்பந்து உலகின் நட்சத்திரமாக திகழும் மெஸ்ஸிக்கு கனவு கோப்பையாகும்.

கால்பந்து ஆட்டத்தில் எத்தனையோ சாதனைகளை மெஸ்ஸி கொண்டிருந்தாலும், உலகக் கோப்பை என்ற மகுடம் மட்டுமே அவர் தலையில் ஏறாமல் உள்ளது. அதை நனவாக்க வேண்டும் என்ற முனைப்பில் 2006 முதல் 2022 வரை ஐந்து உலகக் கோப்பையில் விளையாடி வரும் மெஸ்ஸி 25 போட்டிகளில் களமிறங்கியுள்ளார். இம்முறை அரையிறுதியில் குரோஷியா அணியை வீழ்த்தியுள்ள மெஸ்ஸியின் அர்ஜெண்டினா அணி, இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

அரையிறுதி போட்டியில் அர்ஜெண்டினா 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. மெஸ்ஸி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி கோல் ஒன்றை அடித்தார். உலகக் கோப்பை இறுதிப் போட்டியுடன் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக கேப்டன் மெஸ்ஸி அறிவித்துள்ளார். இந்நிலையில், போட்டி முடிந்த பின்னர் அர்ஜெண்டினா அரசு தொலைக்காட்சியை சேர்ந்த நிருபர் அவரை பேட்டி கண்டார். அதன் பின்னர் அந்த நிருபரே மெஸ்ஸியிடம் அவரின் சிறப்பான ஆட்டம் மற்றும் நாட்டின் புகழுக்காக அவர் கொடுத்த பங்களிப்பை மனம் நெகிழ்த்து புகழ்ந்து பாராட்டினார்.

தொடர்ந்து அந்த நிருபர் மெஸ்ஸியிடம் "நமது அணி உலகக் கோப்பை வெல்லும், அது தான் அனைவரின் விருப்பமும்.இருப்பினும் முடிவுகள் என்னவாக இருந்தாலும், ஒவ்வொரு அர்ஜெண்டின மக்களின் இதயத்திலும் நீங்கள் துடித்துக்கொண்டு இருக்கிறீர்கள்.

இது உலகக் கோப்பைவிட மிக உயர்வான ஒன்று. இதை யாராலும் உங்களிடம் இருந்து பறிக்க முடியாது. பலரின் வாழ்வில் மகிழ்ச்சியை கொடுத்த உங்களுக்கு அவர்கள் மூலமாக நான் தரும் நன்றி கடன் இது என்று மெஸ்ஸியை புகழ்ந்து பாராட்டினார்.

இதையும் படிங்க: இந்தியாவை வீழ்த்திய பிறகு நான் எங்கு சென்று பொருள் வாங்கினாலும் யாரும் பணம் வாங்குவதில்லை - முகமது ரிஸ்வான்

அந்த பெண் நிருபரின் புகழ் வார்த்தைகளை கேட்க கேட்க மெஸ்ஸி உள்ளம் நெகிழ்ந்து உருகிப் போய் நின்றார். இது அவரின் முகத்தில் உணர்வுப்பூர்மான ரியக்ஷனாக தென்பட்டது. இந்த காணொலி இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், மெஸ்ஸியின் இந்த ரியக்ஷனை ரசிகர்கள் ஆசையுடன் பார்த்து மகிழ்கின்றனர்.

First published:

Tags: Argentina, FIFA 2022, FIFA World Cup 2022, Viral Video