கத்தாரில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் இறுதி போட்டியில் அர்ஜெண்டினா அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதுவரை நடைபெற்ற கால்பந்தாட்ட வரலாற்றில் மிகுந்த பரபரப்புடன் நடைபெற்ற இறுதிப் போட்டியாக நேற்றைய அர்ஜெண்டினா – பிரான்ஸ் இடையிலான ஆட்டம் இருந்தது எனலாம்.
ஆட்டத்தின் முதல் பாதியில் அர்ஜெண்டினா இரு கோல்களை அடித்து கோப்பையை கிட்டத்தட்ட உறுதி செய்த போது, இரண்டாவது பாதியில் பிரான்ஸ் வீரர் எம்பாப்பே அடுத்தடுத்து இரு கோல்கள் அடித்து திருப்புமுனையை ஏற்படுத்தினார். இதையடுத்து போட்டி 30 நிமிடம் எக்ஸ்ட்ரா டைம்முக்கு சென்றது. அப்போது அர்ஜெண்டினா கேப்டனும் நட்சத்திர வீரருமான மெஸ்ஸி 3ஆவது கோலை அடித்து கோப்பைக்கு அருகே அணியை கொண்டு சேர்த்தார். ஆனாலும், விடாது கருப்பாக எம்பாப்பே சில நிமிடங்களிலேயே கோல் அடித்து போட்டியை மீண்டும் சமன் செய்தார்.
கூடுதல் ஆட்ட நேரமும் நிறைவடைந்ததால், தொடர்ந்து நடந்த பெனால்டி ஷூட் அவுட்டில் 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்சை வீழ்த்தி அர்ஜென்டினா கோப்பையை வென்றது.போட்டியை வென்று அர்ஜெண்டினா கோப்பையை வென்றாலும் பலரின் மனதை வென்றவராக இருந்தவர் பிரன்ஸ்சின் இளம் வீரர் எம்பாப்பே. ஒவ்வொரு முறையும் அர்ஜெண்டினா கோல் அடித்து வெற்றியை நோக்கி செல்லும் போதெல்லாம், தனி ஆளாக பிரான்ஸ் நாட்டிற்கு சளைக்காமல் கோல் அடித்து அர்ஜெண்டினாவுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்தார்.
இதையும் படிங்க: 'இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சி' - மெஸ்ஸி, அர்ஜெண்டினா அணிக்கு வாழ்த்துகளை தெரிவித்த பிரதமர் மோடி!
மேலும், உலகக் கோப்பை இறுதிப் போட்டி வரலாற்றிலேயே ஹாட்ரிக் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையும் எம்பாப்பே பெற்றார். இப்படி அசாத்திய ஆட்டத்தை வெளிப்படுத்தி எம்பாப்பேவுக்கு அந்நாட்டின் அதிபர் இமானுவேல் மேக்ரானே களத்தில் நேரடியாக ஆரத்தழுவி பாராட்டி ஆறுதல் கூறினார். தோல்லியை தாங்க முடியாமல் களத்தில் அமர்ந்திருந்த எம்பாப்பேவை நோக்கி அரங்கில் இருந்து தாமாக எழுந்து வந்து ஆறுதல் கூறினார் அதிபர் மேக்ரான்.
Not the moment, mate: Mbappé and Deschamps both completely blank President Macron pic.twitter.com/bpOxpQOhD6
— Jeremy Vine (@theJeremyVine) December 18, 2022
நாட்டின் தலைமை பொறுப்பில் இருக்கும் அதிபர், தன்னாட்டின் சிறந்த வீரரிடம் பல நிமிடங்கள் உடனிருந்து ஆறுதல் கூறிய அந்த காணொலிகள் சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்று வைரலாகி வருகின்றது. இதற்கு முன்னர் நடைபெற்ற 2018ஆம் உலகக் கோப்பையில் பிரான்ஸ் அணி தான் சாம்பியன் பட்டம் வென்றது, அந்த இறுதிப்போட்டியிலும் எம்பாப்பே கோல் அடித்து அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Emmanuel Macron, FIFA 2022, FIFA World Cup 2022, France, Viral Video