Home /News /sports /

சர்வதேச செஸ் கூட்டமைப்பின் துணைத் தலைவராக விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு

சர்வதேச செஸ் கூட்டமைப்பின் துணைத் தலைவராக விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு

உலகளவில் அதி வேகமாக செஸ் விளையாட கூடிய செஸ் வீரனாக வலம்வந்துள்ளார்

உலகளவில் அதி வேகமாக செஸ் விளையாட கூடிய செஸ் வீரனாக வலம்வந்துள்ளார்

FIDE : இந்திய நாட்டை சேர்ந்த செஸ் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் சர்வதேச செஸ் கூட்டமைப்பின் துணைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    சர்வதேச செஸ் கூட்டமைப்பின் துணைத் தலைவராக இந்திய நாட்டின் செஸ் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் ஐந்து முறை உலக செஸ் சாம்பியன் பட்டம் பெற்றவர்.

    சர்வதேச செஸ் கூட்டமைப்பில் தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான தேர்வு நடைபெற்றது. அதில்,  ஆர்கடி டிவோர்கோவிச் 157 வாக்குகளில் இரண்டாம் முறை மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  வரை எதிர்த்து களம் இறங்கிய ஆண்ட்ரீ பாரிஸ்போலெட்ஸ்-க்கு வெறும் 16 வாக்குகள் மட்டும் கிடைத்தன. ஆர்கடி டிவோர்கோவிச் அணியில் உள்ள இந்திய நாட்டின் செஸ் கிராண்ட் மாஸ்டரும் தமிழகத்தை சேர்ந்தவருமான விஸ்வநாதன் ஆனந்த் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    விஸ்வநாதன் ஆனந்த் 1988 இல் இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர் என்ற சிறப்பை பெற்றார். 2006இல் எலோ ரேட்டிங் (Elo rating), அதாவது செஸ் விளையாட்டில் விளையாடுபவர்களின் திறமையைக் கணக்கிடும் அளவில் 2800 புள்ளிகள் பெற்று உலகளவில் செஸ் வரலாற்றில் அந்த அளவை பெறும் நான்காவது நபர் எனும் பெருமையைப் பெற்றார் விஸ்வநாதன் ஆனந்த். மேலும் உலகத் தர வரிசையில் 21 மாதங்கள் தொடர்ந்து முதல் இடத்தில் இருந்தார். சர்வதேச செஸ் கூட்டமைப்பில் நடத்தப்பட்ட உலக செஸ் சாம்பியன்சிப் போட்டிகளில் பங்கேற்று உலக செஸ் சாம்பியன் பட்டத்தைப் பெற்றுள்ளார். மேலும் உலகளவில் அதி வேகமாக செஸ் விளையாடக் கூடிய செஸ் வீரராக வலம் வந்துள்ளார்.



    உலக அளவில் சதுரங்க போட்டியில் அசைக்க முடியாத வெற்றியாளராக வலம் வந்த கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த்தை கவுரவப்படுத்தும் விதமாக இந்திய அரசு 1985இல் அர்ஜுனா விருது, 1987இல் பத்மஸ்ரீ விருது, 1991 - 92 ஆம் ஆண்டுக்கான ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது, 2000இல் பத்மபூஷன் விருது, 2007இல் இரண்டாம் உயரிய விருதான பத்மவிபூஷன்  ஆகிய விருதுகளை வழங்கியது. விளையாட்டுத் துறையிலிருந்து பத்மவிபூஷன் பெற்ற முதல் நபர் இவரே.

    தற்போது சர்வதேச செஸ் கூட்டமைப்பின் துணைத் தலைவராக இந்திய நாட்டை சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பது நாட்டிற்குப் பெருமை சேர்ப்பதுடன் மகிழ்ச்சியையும் அளிக்கிறது.
    Published by:Janvi
    First published:

    Tags: Chess, Viswanathan Anand

    அடுத்த செய்தி