ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

2022 பிபா உலகக் கோப்பை கால்பந்து: இலவசமாக ஜியோவில் பார்க்கலாம்.. முழு விவரம் இங்கே!

2022 பிபா உலகக் கோப்பை கால்பந்து: இலவசமாக ஜியோவில் பார்க்கலாம்.. முழு விவரம் இங்கே!

ஜியோ

ஜியோ

FIFA World Cup: 2022ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து தொடரை தமிழ், மலையாளம், வங்காளி என மாநில மொழிகளிலும் ஜியோ சினிமா வழங்கவுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Mumbai, India

  2022 பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கள் கத்தார் நாட்டில் நடைபெறுகின்றது. உலகக் கோப்பை போட்டிகள் இன்னும் சில நாள்களில் தொடங்கவுள்ள நிலையில், ரசிகர்கள் இடையே இப்போதே ஆர்வம் தலைதூக்கியுள்ளது. இந்நிலையில், நாட்டின் முன்னணி விளையாட்டு ஒளிபரப்பு நெட்வொர்க் ஆன நெட்வொர்க் 18 குழுமத்தின் Viacom18 ஸ்போர்ட்ஸ் பிபா உலகக் கோப்பைக்கு சிறப்பு விளம்பர ப்ரோமஷனை முன்னெடுத்துள்ளது. 'இதைவிடப் பெரியது வேறு ஏதும் இல்லை' 'Isse Bada Kuch Nahi' என்ற முழக்கத்துடன் உலகக் கோப்பை தொடரை கொண்டாடவுள்ளது.

  நவம்பர் 20 தொடங்கி, டிசம்பர் 18 வரை நடைபெறும் உலகக் கோப்பை தொடரை ஜியோ சினிமா வாடிக்கையாளர்கள் அனைவரும் பிபா உலகக் கோப்பைகள் அனைத்தையும் இலவசமாக லைவ்வில் கண்டு களிக்கலாம். அதேபோல், இந்த போட்டிகளை ஸ்போர்ட்ஸ் 18 டிவி சேனலிலும் பார்க்கலாம்.

  இந்த தொடருக்கான கேம்பெயின் விளம்பர படம் ஒன்றை வையாகாம் தயாரித்துள்ளது. கைப்பாவை பொம்மை ஷோவை அடிப்படையாகக் கொண்டு கால்பந்தாட்ட ரசிகர்களை வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் நட்சத்திர வீரர்கள் மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மார், ஹாரி கேன், எம்பப்பே போன்றோரின் பொம்மைகள் இடம் பெற்று பார்வையாளர்களை கவர உள்ளது. இது குறித்து வையாகாம் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "உலகின் அதிக மக்களால் பார்க்கப்படும் விளையாட்டு நிகழ்வு என்பது உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் தான்.

  இதையும் படிங்க: எதிர்காலத்தில் ஐபிஎல் போட்டி.. நிருபரின் கேள்வியால் திகைத்துப்போன பாகிஸ்தான் கேப்டன்.. சமாளித்து முடித்த மேனேஜர்!

  நான்காண்டுக்கு ஒரு முறை நடைபெறும் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வாக இதில் ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை தர வையாகம் திட்டமிட்டுள்ளது. எனவே தான் இதை விட பெரியது வேறு ஏதும் இல்லை என்ற முழக்கத்துடன் இந்த தொடரை விளம்பரம் செய்து வருகிறது. இது ரசிகர்களின் மனதில் மறக்க முடியாத நிகழ்வாய் இடம் பெறும் என்பதில் மாற்றுக் கருத்து ஏதும் இல்லை" என்றார்.

  2022ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து தொடரை தமிழ், மலையாளம், வங்காளி என மாநில மொழிகளிலும் ஜியோ சினிமா வழங்கவுள்ளது. ஐஓஎஸ் மற்றும் ஆன்ட்ராய்டு மொபைல்களில் இந்த ஜியோ சினிமா செயலியை அனைவரும் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இதன் மூலம் இந்தியாவில் உள்ள கால்பந்து ரசிகர்கள் 64 போட்டிகளையும் 4k தரத்தில் கண்டுகளிக்கலாம்.

  Published by:Kannan V
  First published:

  Tags: FIFA, FIFA World Cup, Jio TV, Network 18