ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

கொரோனா அச்சம்.. அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் போட்டி ரத்து

கொரோனா அச்சம்.. அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் போட்டி ரத்து

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

US Open badminton : கொரோனா காரணமாக தொடர்ந்து 3-வது ஆண்டு இத்தொடர் ரத்தாகியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  கொரோனா அச்சம் காரணமாக அமெரிக்க ஓபன் பேட்மின்டன் போட்டி ரத்து செய்யப்பட்டு உள்ளது. தற்போது ஜெர்மனி, ஆஸ்திரேலியா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் கொரோனா 4-வது அலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், அமெரிக்காவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

  இதன் ஒரு பகுதியாக வரும் அக்டோபர் 4-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை நடைபெற இருந்த அமெரிக்க ஓபன் பேட்மின்டன் தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக தொடர்ந்து 3-வது ஆண்டு இத்தொடர் ரத்தாகியுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதற்கிடையில், இந்தோனேசிய மாஸ்டர்ஸ் பேட்மின்டன் தொடர் அந்நாட்டின் தலைநகர் ஜகார்த்தாவில் நேற்று தொடங்கியது. இதில், இந்தியாவின் பி.வி.சிந்து, லக்ஷயா சென், சமீர் வர்மா உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Badminton, Corona, Covid-19, PV Sindhu, Sports