Video | ஜாம்பவானை சாய்த்து சாம்பியன் பட்டம் வென்ற 19 வயது இளம் வீராங்கனை!

news18
Updated: September 8, 2019, 9:59 AM IST
Video | ஜாம்பவானை சாய்த்து சாம்பியன் பட்டம் வென்ற 19 வயது இளம் வீராங்கனை!
பியாங்கா ஆண்டரீஸ்கு | செரீனா வில்லியம்சன்
news18
Updated: September 8, 2019, 9:59 AM IST
அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில், பிரபல வீராங்கனை செரினா வில்லியம்சனை, கனடாவின் 19 வயதே ஆன பியாங்கா ஆண்டரீஸ்கு வீழ்த்தி முதன்முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார்.

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. பெண்கள் பிரிவு இறுதிப் போட்டியில் கனடாவின் 19 வயதே ஆன பியாங்கா ஆண்டரீஸ்கு - செரீனா வில்லியம்ஸ் மோதினர். அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் 10-வது முறையாக செரீனா விளையாடினார்.

முதல் செட்டை 6-3 என்று செரீனாவுக்கு இடமே தராமல் கைப்பற்றிய, ஆண்டரீஸ்கு, இரண்டாவது செட்டில் மேலும் ஆக்ரோஷமாக விளையாடி 7-5 என்ற கணக்கில் கைப்பற்றி செரீனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.


ஆண்டரீஸ்கு வெல்லும் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும். செரீனா வில்லியம்சன் இதுவரை 6 முறை அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்றுள்ளார். மொத்தமாக 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் செரீனா தன் வசம் வைத்துள்ளார்.

அமெரிக்க ஓபன், பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன், ஆஸ்திரேலிய ஓபன் ஆகிய 4 டென்னிஸ் தொடர்களும் கிராண்ட்ஸ்லாம் என்று அழைக்கப்படுகிறது.





First published: September 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...