ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

யுனைடெட் கோப்பை டென்னிஸ் தொடர்… இத்தாலியை வீழ்த்தி கோப்பையை வென்றது அமெரிக்க அணி

யுனைடெட் கோப்பை டென்னிஸ் தொடர்… இத்தாலியை வீழ்த்தி கோப்பையை வென்றது அமெரிக்க அணி

வெற்றிக் கோப்பையுடன் அமெரிக்க அணி

வெற்றிக் கோப்பையுடன் அமெரிக்க அணி

முதல்முறை தொடங்கப்பட்ட யுனைடெட் கோப்பை டென்னிஸ் தொடரிலேயே, மகுடம் சூடியதால் அமெரிக்க வீரர், வீராங்கனைகள் கொண்டாட்டத்தில் திளைத்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

யுனைடெட் கோப்பை டென்னிஸ் தொடரில் இத்தாலியை வீழ்த்தி, அமெரிக்க அணி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. முதல் முறையாக தொடங்கப்பட்ட இந்த தொடர், ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. ரூ. 125 கோடி பரிசுத் தொகை கொண்டதாக இந்த தொடர் நடத்ப்பட்டது. முதல் போட்டிகள் கடந்த மாதம் 29ஆம் தேதி ஆரம்பமாகின. மொத்தம் 18 நாடுகளைச் சேர்ந்த அணிகள் 6 பிரிவுகளாக பங்கேற்றன.

ஒற்றையர், இரட்டையர், கலப்பு இரட்டையர் என குழு ஆட்டங்களாக போட்டிகள நடத்தப்பட்டன.ஏடிபி மற்றும் டபிள்யூ. டி.ஏ. ஆகியவை இணைந்து இந்த போட்டியை நடத்தியது. லீக் மற்றும் நாக்-அவுட் முறையில் நடத்தப்பட்ட தொடரின், இறுதிப் போட்டியில் அமெரிக்கா - இத்தாலி அணிகள் பலப்பரீட்சை மேற்கொண்டன.

5 பிரிவுகளை கொண்ட போட்டியில், முதல் 3 பிரிவுகளில் அமெரிக்கா வெற்றிக்கொடி நாட்டியது. இதையடுத்து, 4-வதாக நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் மேடிசன் கீஸ் (Madison Keys) இத்தாலியின் லூசியா பிரான்ஜெட்டியை (Lucia Bronzetti) 6-3, 6-2 என்ற செட்களில் வீழ்த்தினார்.

‘டி20 கேப்டன்ஷிப்பை பாண்ட்யாவிடம் ரோஹித் ஒப்படைக்க வேண்டும்’ – முன்னாள் வீரர் பரபரப்பு பேட்டி

கடைசிப் பிரிவு போட்டி நடைபெறாததால், 4-0 என்ற விகிதத்தில் அமெரிக்கா வெற்றிபெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

விராட் கோலியின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்கு சூர்ய குமார் யாதவ் ரீப்ளே… வைரலாகும் க்யூட் ரியாக்ஷன்

முதல்முறை தொடங்கப்பட்ட யுனைடெட் கோப்பை டென்னிஸ் தொடரிலேயே, மகுடம் சூடியதால் அமெரிக்க வீரர், வீராங்கனைகள் கொண்டாட்டத்தில் திளைத்தனர்.

First published:

Tags: Tennis