கொல்கத்தாவில் உள்ள VYBK ஸ்டேடியத்தில் சனிக்கிழமை நடந்த AFC ஆசிய கோப்பை தகுதிச் சுற்றில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கடினமான வெற்றியைப் பெற்று 3 புள்ளிகளைப் பெற்றதை அடுத்து, இந்திய மற்றும்
ஆப்கானிஸ்தான் வீரர்கள் ஒருவரையொருவர் தாக்கி சண்டையில் ஈடுபட்டனர்.
ஆசிய கோப்பை கால்பந்து தகுதிச்சுற்றுப்போட்டியில் வெற்றி பெற்ற இந்திய வீரர்களை திடீரென ஆப்கானிஸ்தான் வீரர்கள் தாக்கியதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் ஸ்டேடியத்தில் நேற்று முன் தினம் நடைபெற்ற ஆசிய கோப்பை தகுதிச் சுற்று ஆட்டத்தில் இந்தியா ஆப்கானிஸ்தானை 2- 1 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றிப்பெற்றது.
இந்தநிலையில், இந்திய மற்றும் ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கு நடுவே முதலில் வாக்குவாதமாக நடைபெற்ற சண்டை பின்னர் கைகலப்பாக மாறியது. ஒரு ஆப்கானிஸ்தான் ரிசர்வ் வீரர் இந்திய கோல்கீப்பர் குர்பிரீத் சிங் சந்துவின் முகத்தில் அடித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால் அங்கு சிறிதுநேரம் பரப்பரப்பு ஏற்பட்டு நடுவர்கள் வந்து சமாதானம் செய்து வைத்தனர்.
சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்ட ஒரு வீடியோவில், மூன்று ஆப்கானிஸ்தான் மற்றும் இரண்டு இந்திய வீரர்கள் சண்டையில் ஈடுபட்டனர்.ஒருவரையொருவர் தள்ளிவிட்டுக் கொண்டிருந்தனர்.
AFC அதிகாரிகள் மைதானத்திற்கு விரைந்தனர், ஆனால் கைகலப்பு மேலும் தீவிரமடைந்தது. எதற்காக தகராறு ஏற்பட்டது என்று தெரியவில்லை. ஏன் இருநாட்டு வீரர்களும் சண்டையிட்டுக் கொண்டனர் என்று தெரியவில்லை, இந்தக் கால்பந்தை நடத்துபவர்களும் காரணத்தைக் கூறவில்லை.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.