Home /News /sports /

ஒரு புறம் கிரிக்கெட்டில் புத்தெழுச்சி மறுபுறம் கால்பந்தில் ஹங்கேரியிடம் வரலாறு காணாத வீழ்ச்சி-இங்கிலாந்தின் முரண் விதி

ஒரு புறம் கிரிக்கெட்டில் புத்தெழுச்சி மறுபுறம் கால்பந்தில் ஹங்கேரியிடம் வரலாறு காணாத வீழ்ச்சி-இங்கிலாந்தின் முரண் விதி

இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேன்

இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேன்

நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடரில் இங்கிலாந்து அணி ஹங்கேரியிடம் 0-4 என்ற கோல் கணக்கில் செம உதை வாங்கி 1928-க்குப் பிறகு தங்கள் சொந்த மண்ணில் படுமோசமான தோல்வியைச் சந்தித்துள்ளது.

    நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடரில் இங்கிலாந்து அணி ஹங்கேரியிடம் 0-4 என்ற கோல் கணக்கில் செம உதை வாங்கி 1928-க்குப் பிறகு தங்கள் சொந்த மண்ணில் படுமோசமான தோல்வியைச் சந்தித்துள்ளது.

    நேற்று ட்ரெண்ட் பிரிட்ஜில் நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் 299 ரன்களை 50 ஓவர்களில் விரட்டி புதிய இங்கிலாந்து பிறந்தது, ஆனால் அதே வேளையில் கால்பந்து பாரம்பரியத்துக்கு பெயர்போன இங்கிலாந்து, ஹங்கேரியிடம் செம உதை வாங்கியது.

    கத்தாரில் இன்னும் 5 மாதங்களில் உலகக்கோப்பை கால்பந்து திருவிழா தொடங்கும் நிலையில் இந்த உதை இங்கிலாந்துக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும், அதோடு மன்னிப்பு என்றால் என்னவென்று தெரியாத இங்கிலாந்து கால்பந்து ரசிகர்கள் கடுமையாக இங்கிலாந்து அணியை கேலியும் கிண்டலும் வசையும் பாடினர்.

    யூரோ 2020-ல் இங்கிலாந்து கால்பந்து அணி மேனேஜர் காரெத் சவுத்கேட் ஒரு தேசிய ஹீரோ, ஆனால் நேற்று, ’நீ என்ன செய்கிறாய் என்று உனக்கே தெரியாது’ ரக கேலி, கிண்டலுக்கு ஆளானார்.

    ஹங்கேரியில் கால்பந்தில் நிறவெறி போக்குகள் காணப்பட்டதால் ஃபீபா, மற்றும் ஐரோப்பிய கால்பந்து லீக் யூனியன் இரண்டும் ஹங்கேரிக்கு தண்டனை அளித்தது. நேற்று இங்கிலாந்து ரசிகர்கள் ஹங்கேரி தேசிய கீதம் பாடும்போது கடும் இடையூறு செய்தனர்.

    ஹங்கேரியின் ரோலண்ட் சலாய் ஆரம்பத்தில் ஒரு கோல் போட்டார், பிறகு சலாய் 70வது நிமிடத்தில் இன்னொரு கோலையும் அடித்து 2-0 என்று ஹங்கேரிக்கு முன்னிலை கொடுத்தார். இங்கிலாந்து பாதுகாப்பு அரண் செம சொதப்பு சொதப்ப ஹங்கேரியின் சிசால்ட் நேகி பாக்சின் முனையிலிருந்து ஒரு கோலை அடிக்க ஹங்கேரி 3-0. டேனியல் கேஸ்டேக் 4வது கோலை அடித்த போது இங்கிலாந்து ரசிகர்கள் முகத்தில் ஈயாடவில்லை.

    இங்கிலாந்து வீரர்கள் களைப்படைந்தவர்கள் போல் ஆடினர், பந்தை இவர்கள் காலிலிருந்தே ஹங்கேரி வீரர்கள் பிடுங்கிச் சென்றதும் நிகழ்ந்தது.

    இங்கிலாந்து கேப்டன் ஹேரி கேன் கூறும்போது, “நீண்ட காலத்துக்குப் பிறகு எங்களுக்கு ஒரு பெரிய தோல்வி. கடந்த 4-5 ஆண்டுகளாக எங்கள் தடுப்பு அரண் தான் பெரிய வெற்றியடைந்தது, இந்த இரவை மறக்க வேண்டியதுதான். கன்னத்தில் விழுந்த அறையாக எடுத்துக் கொண்டு அடுத்ததை நோக்கி நகர வேண்டியதுதான்” என்றார்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: England, Football

    அடுத்த செய்தி