ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

6-0: இந்தியக் கால்பந்து அணி பரிதாப தோல்வி- கோலை நோக்கி ஒரு ஷாட் கூட அடிக்காமல் படுதோல்வி

6-0: இந்தியக் கால்பந்து அணி பரிதாப தோல்வி- கோலை நோக்கி ஒரு ஷாட் கூட அடிக்காமல் படுதோல்வி

இந்தியா-யுஏஇ கால்பந்து போட்டி

இந்தியா-யுஏஇ கால்பந்து போட்டி

அன்று ஓமன் அணிக்கு எதிராக சர்வதேச நட்புக் கால்பந்தில் 10 அறிமுக வீரர்களை வைத்துக் கொண்டு 1-1 என்று டிரா செய்த இந்திய அணி நேற்று யுஏஇ அணியிடம் 6-0 என்ற கோல் கணக்கில் பரிதாப தோல்வி அடைந்தது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

அன்று ஓமன் அணிக்கு எதிராக சர்வதேச நட்புக் கால்பந்தில் 10 அறிமுக வீரர்களை வைத்துக் கொண்டு 1-1 என்று டிரா செய்த இந்திய அணி நேற்று யுஏஇ அணியிடம் 6-0 என்ற கோல் கணக்கில் பரிதாப தோல்வி அடைந்தது.

சுனில் சேத்ரிக்கு கொரோனா காய்ச்சல் வந்து விட்டதால் அணியில் இல்லை, இதனால் இந்திய அணிக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டது. இந்திய அணியினால் ஒரு ஷாட்டைக் கூட கோலை நோக்கி அடிக்க முடியாமல் மறக்க வேண்டிய ஒரு ஆட்டமாக இது அமைந்தது.

மாறாக யுஏஇ வீரர் அலி மப்கவுத் 12, 32, 60வது நிமிடங்களில் கோல்களை அடித்து ஹாட்ரிக் சாதனை புரிந்தார். கலீல் இப்ராஹிம் 64ம் நிமிடத்திலும் ஃபாபியோ டி லிமா 71வது நிமிடத்திலும் செபாஸ்டியன் லூகாச் தாக்லியாபூ 84வது நிமிடத்திலும் கோல்களை திணித்தனர்.

இந்திய வீரர்களுக்கு பந்தை எப்படி காலில் நிறுத்தி பாஸ் செய்வதென்றே தெரியவில்லை என்பது போல் இருந்தது ஆட்டம். 27 வீரர்கள் கொண்ட அணியில் பயிற்சியாளர் புதிய வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கிறேன் பேர்வழி என்று இழிவான தோல்விகளைச் சந்திக்க காரணமாகியுள்ளார்.

இதற்கு முன்பாக 2010-ம் ஆண்டு அபுதாபியில் நடைபெற்ற போட்டியிலும் யுஏஇயிடம் இந்தியா 0-5 என்ற கோல்கள் வித்தியாசத்தில் மண்ணைக் கவ்வினர். யுஏஇ அணியின் டெக்னிக் முன்னால் இந்திய வீரர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

இந்திய வீரர்களால் பந்தை வாங்கி அதனை சிறிது நேரம் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியவில்லை, மைதானம் நெடுக யுஏஇ வீரர்கள் பின்னால் ஓடிக்கொண்டே இருந்தனர்.

இந்தியாவின் ஒரேயொரு மூவ் மட்டும் இடைவேளைக்கு முன்பாக கொஞ்சம் பரவாயில்லை போல் இருந்தது மன்வீர் சிங்கிடம் வந்த பந்தை கோல் நோக்கி அவர் அடித்ஹ்டார், ஆனால் பந்து தடுக்கப்பட்டது. மறக்கப்பட வேண்டிய ஒரு ஆட்டம்.

கிரிக்கெட் ஆட்டத்துக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் கால்பந்து ஹாக்கி ஆட்டங்களுக்கு தரப்படுவதில்லை, பிரதமர் மோடி முதல் அமித் ஷா, மற்றும் அமைச்சர்கள் பலரும் கிரிக்கெட் வீரர்களுக்காகப் பேசுகின்றனர். அவர்கள் ஆட்டத்திறனை விதந்தோதுகின்றனர், ஆனால் கால்பந்து, ஹாக்கி வேண்டாத பிள்ளையாகி விட்டது. ஹாக்கி நம் தேசிய விளையாட்டு, இந்தியாவில் கால்பந்துக்கு நல்ல புகழ் இருக்கிறது. ஆனாலும் உலக அளவில் 104வது இடம்.

கிரிக்கெட் பணக்கார விளையாட்டாக இருக்கிறது, கால்பந்து, ஹாக்கி ஏழைகளின் ஆட்டமாக மாறி விட்டது.

ஹாக்கியிலெல்லாம் ஒரு காலத்தில் ஒலிம்பிக் தங்கப்பதக்கங்களைக் குவித்து வந்தனர்.  பிரேசில் எப்படி கால்பந்திலோ அப்படித்தன் இருந்தது இந்தியா ஹாக்கியில்.

புல்தரையில் ஆடிவந்த போது ஜெர்மனி, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, அர்ஜெண்டினா, போன்ற நாடுகளை ஓட ஓட விரட்டியுள்ளோம். ஆனால் புதுவகை ஆஸ்ட்ரோ டர்ஃப் என்ற ஒன்றைக் கண்டுப்பிடித்து இந்தியாவின் ஹாக்கி ஆதிக்கத்தை ஐரோப்பியர்கள் ஒழித்து விட்டனர், இங்குள்ள அரசுகளும் ஆஸ்ட்ரோ டர்புக்குரிய பயிற்சிகளை வழிமுறைகளை வீரர்களுக்கு அளிக்கத் தவறியது.

Published by:Muthukumar
First published:

Tags: Football, Indian team