முகப்பு /செய்தி /விளையாட்டு / துருக்கி நிலநடுக்கம்.. இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த பிரபல கால்பந்து வீரர்..!

துருக்கி நிலநடுக்கம்.. இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த பிரபல கால்பந்து வீரர்..!

துருக்கி கால்பந்து வீரர் அஹ்மத் ஐயுப் டர்கஸ்லான்

துருக்கி கால்பந்து வீரர் அஹ்மத் ஐயுப் டர்கஸ்லான்

நிலநடுக்க இடிபாடுகளில் சிக்கி துருக்கி நாட்டைச் சேர்ந்த கோல் கீப்பர் அஹ்மத் ஐயுப் டர்கஸ்லான் பரிதாபமாக உயிரிழந்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • inter, IndiaIstanbul Istanbul Istanbul Istanbul

துருக்கி நாட்டின் காஜியான்தெப் நகரை மையமாக வைத்து நேற்று முன்தினம் அதிகாலை 7.8 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது, துருக்கி மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. மீட்பு பணிக்காக இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் பேரிடர் குழுக்களை அனுப்பி உதவிக்கரம் நீட்டியுள்ளன.

இந்த நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 8,300ஐ தாண்டியுள்ளது. இடிபாடுகள் அப்புறப்படுத்தி மீட்புப் பணிகளில் ஈடுபட நேரம் எடுப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில், இந்த கோர நிலநடுக்கத்தில் கால்பந்து வீரர் ஒருவர் உயிரிழந்தது விளையாட்டு உலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்நாட்டின் யாவுசலி என்ற பகுதியில் பிறந்தவர் அஹ்மத் ஐயுப் டர்கஸ்லான். 28 வயதான இவர் கால்பந்து அணியின் கோல் கீப்பராக இருந்தார்.

துருக்கியின் Yeni Matalyaspor என்ற கிளப்பின் பிரதான கோல் கீப்பராக விளையாடி வந்த இவர், கடந்த 6ஆம் தேதி ஏற்பட்ட கோர நிலநடுக்கத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். கோல்கீப்பர் அஹமத் தனது] வீட்டில் மனைவியுடன் இருந்த நிலையில், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

அதேவேளை, அவரது மனைவி உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். கோல்கீப்பரின் மரணத்திற்கு கால்பந்து வீரர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதேபோல், கானா நாட்டைச் சேர்ந்த பிரபல கால்பந்து வீரரான கிறிஸ்டியன் அட்சுவும் இந்த நிலநடுக்கத்தில் சிக்கினார். இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

First published:

Tags: Football, Turkey Earthquake