தேசிய மாற்றுத்திறனாளிகளுக்கான தடகள விளையாட்டு போட்டியில் தங்கம் வென்று சாதித்த தமிழக வீரர்

தடகள வீரர் வெங்கடேஷ்

சர்வதேச  தடகள வீரரும் பயிற்சியாளருமான மணிகண்ட ஆறுமுகத்திடம்  பயிற்சி பெற்ற Rockfort Star Acadamey sports club-யைச்  சேர்ந்த கால்லூரி மாணவரான  தடகள வீரர் வெங்கடேஷ், 100 மீட்டர் ஓட்டபந்தயத்தில் தங்கம் வென்றுள்ளார்.

  • Share this:
கர்நாடக மாநிலம், பெங்களூருவில் கடந்த 24-ம் தேதி முதல் 27-ம் தேதி  வரை  மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய தடகள போட்டி நடைபெற்று வருகிறது. இதில், சர்வதேச  தடகள வீரரும் பயிற்சியாளருமான மணிகண்ட ஆறுமுகத்திடம்  பயிற்சி பெற்ற Rockfort Star Acadamey sports club-யைச்  சேர்ந்த கால்லூரி மாணவரான  தடகள வீரர் வெங்கடேஷ், 100 மீட்டர் ஓட்டபந்தயத்தில் தங்கம் வென்றுள்ளார். மேலும், திருச்சியைச் சேர்ந்த வீரர்கள் மகேந்திரன், குண்டு எறிதலில் 4 ம் இடத்தையும் முகமது ஆசிக்,
100 மீட்டர் ஓட்டபந்தயத்தில்  4 ம் இடத்தையும்  பிடித்துள்ளனர்.

கடந்த வாரம் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் நடைபெற்ற தேசிய தடகளப் போட்டியில் மணிகண்டன் ஆறுமுகம் பயிற்சி அளித்த, திருச்சியைச் சேர்ந்த தனலட்சுமி 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கம், 200 மீ ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் பெற்றார். இலக்கியதாசன் 200 மீ ஓட்டத்தில் தங்கம்,  100 மீ ஓட்டத்தில் வெண்கலப் பதக்கமும் பெற்றார். விக்னேஷ் 200 மீ ஓட்டத்தில் வெண்கலம் வென்றார்.
திருச்சி வீரர், வீராங்கனைகள் பதக்கங்களை குவித்த நிலையில், மாற்றுத் திறனாளிகளுக்கான போட்டியிலும் தங்கம் மற்றும் சிறப்பிடம் பெற்றுள்ளனர். இதையடுத்து பயிற்சியாளர் மணிகண்டன் ஆறுமுகத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.

 
Published by:Ram Sankar
First published: