ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கி : அர்ஜென்டினாவை வீழ்த்தியது இந்தியா.. காலிறுதி வாய்ப்பு உறுதி

டோக்கியோ ஒலிம்பிக்

இந்திய ஆடவர் அணி வெற்றி பெற்றதுடன், காலிறுதி வாய்ப்பையும் உறுதி செய்தது.

 • Share this:
  டோக்யோ ஒலிம்பிக்கில் அர்ஜென்டினாவுக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

  டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கி குரூப் போட்டியில் இன்று இந்திய அணி நடப்புச் சாம்பியன் அர்ஜென்டினா அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. இந்திய வீரர்கள் கோல் அடிக்கும் முனைப்பில் ஆனால் அர்ஜென்டினா வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு கோல் வாய்ப்புகளை தடுத்து நிறுத்தினர் இதனால் முதல் கால்பாதியின் முடிவில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.

  முதல் பாதியில் இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்காத நிலையில் இரண்டாவது கால்பாதியிலும் இரு அணிகளும் சிறப்பாக வெளியாடியது. இதனால் 2-வது கால்பாதியிலும் கோல் இருஅணிகளும் கோல் அடிக்கவில்லை. இந்நிலை் 3-வது காலிறுதியில் இந்தியாவின் வருண் குமார் கோல் அடித்து அணிக்கு முன்னிலை ஏற்படுத்தினார்.  ஆனால் 4-வது கால்பாதி தொடங்கியதுமே அர்ஜெண்டினா பதில் கோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்தது. கடைசி நிமிடத்தில் சிறப்பாக விளையாடிய இந்திய வீரர்கள் அடுத்தடுத்து 2 கோல்கள் அடித்து அசத்தினர். இதனால் 3-1 என்ற கோல் கணக்கில் இந்திய ஆடவர் அணி வெற்றி பெற்றதுடன், காலிறுதி வாய்ப்பையும் உறுதி செய்தது.  இதனால் அடுத்த சுற்றுக்கு இந்தியா செல்வது உறுதியாகி உள்ளது. இந்த ஒலிம்பிக் தொடரை முதலில் வெற்றியோடுதான் தொடங்கியது. நியூசிலாந்துக்கு எதிராக 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியா வென்றது. இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 7-1 கோல் கணக்கில் மிக மோசமான தோல்வியை இந்தியா தழுவியது. அதன்பின் ஸ்பெயினுக்கு எதிரான ஹாக்கி போட்டியில் இந்தியா 3-0 என்ற கோல் கணக்கில் வென்றது குறிப்பிடத்தக்கது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: