முகப்பு /செய்தி /விளையாட்டு / டோக்கியோ பாராலிம்பிக்கில் இன்று தங்கம் வெல்வாரா மாரியப்பன் - போட்டி நேரம் எப்போது?

டோக்கியோ பாராலிம்பிக்கில் இன்று தங்கம் வெல்வாரா மாரியப்பன் - போட்டி நேரம் எப்போது?

மாரியப்பன் தங்கவேலு

மாரியப்பன் தங்கவேலு

பாராலிம்பிக் போட்டிகள் தூர்தர்ஷன், டிடி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிகளில் நேரலையாக ஒளிப்பரப்பாகிறது

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

டோக்கியோ பாராலிம்பிக் ஆடவர் உயரம் தாண்டுதல் (டி63) போட்டியில் இன்று தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு தங்கம் வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கடந்த 2015 ரியோ பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் (டி63) தமிழகத்தை சேர்ந்த தங்கவேலு மாரியப்பன் தங்கம் வென்று அசத்தினார். அதை தொடர்ந்து டோக்கியோ பாராலிம்பிக்கில் மாரியப்பன் தங்கம் வெல்வாரா என்று அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

டோக்கியோ பாராலிம்பிக் ஆடவர் உயரம் தாண்டுதல் டி(63) போட்டி இன்று (ஆகஸ்ட் 31), இந்திய நேரப்படி மாலை 3.55 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த போட்டியில் மாரியப்பன் பங்கேற்க உள்ளார்.

டோக்கியோ பாராலிம்பிக்கில் இந்தியா பங்கேற்கும் போட்டிகள்

பாராலிம்பிக் துவக்க போட்டியில் மாரியப்பன் தங்கவேலு தேசிய கொடியை ஏந்தி செல்லும் வாய்ப்பை பெற்றார். ஆனால் அவர் பயணம் செய்த விமானத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்ததால் தங்கவேலு உட்பட இந்திய அணியை சேர்ந்த 5 பேர் தனிமைப்படுத்தப்பட்டார்கள். இதனால் தேசிய கொடியை ஏந்தி செல்லும் வாய்ப்பை டேக் சந்த் பெற்றார். தற்போது கொரோனா பரிசோதனைகள் முடிவடைந்து தங்கவேலுக்கு கொரோனா தொற்று இல்லை என்பதால் அவர் போட்டியில் பங்கேற்பதில் எந்த சிக்கலும் இல்லை.

Also Read : பாராஒலிம்பிக்: இந்தியா வீரர் வினோத் குமாரின் பதக்கம் திரும்ப பெறப்பட்டது!

பாராலிம்பிக் போட்டிகள் தூர்தர்ஷன், டிடி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிகளில் நேரலையாக ஒளிப்பரப்பாகிறது. அதேப்போல் பிரச்சார் பாரதி ஸ்போர்ட்ஸ் என்ற யூடியூப் சேனலிலும் நேரலையாக ஒளிப்பரப்பட்டு வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Mariyappan Thangavelu, Tokyo Paralympics