முகப்பு /செய்தி /விளையாட்டு / பாராஒலிம்பிக்: இந்தியா வீரர் வினோத் குமாரின் பதக்கம் திரும்ப பெறப்பட்டது!

பாராஒலிம்பிக்: இந்தியா வீரர் வினோத் குமாரின் பதக்கம் திரும்ப பெறப்பட்டது!

வினோத் குமார்

வினோத் குமார்

வினோத் குமாரின் வெற்றி செல்லாது என்பதால் 4வது இடத்தில் இருந்த லத்வியா வீரர் ஐகார்ஸ் அபினிஸ் மூன்றாவது இடத்துக்கு முன்னேறினார். அவருக்கு வெண்கல பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :

பாராஒலிம்பிக் போட்டியின் வட்டு எறிதல் பிரிவில் இந்திய வீரர் வினோத் குமார் பெற்ற வெண்கலப் பதக்கம் திரும்ப பெறப்பட்டது. இதையடுத்து இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 7ல் இருந்து 6 ஆக குறைந்துள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16வது பாராலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன.  இதில் இந்தியா சார்பில் 54 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.  நேற்று நடைபெற்ற வட்டு எறிதல் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற வினோத் குமார் 19.91 மீட்டர் தூரம் வீசி வெண்கலப் பதக்கம் வென்றார். போலந்து வீரர் கோஸ்விச் 20.02 மீட்டர் தூரம் வீசி தங்கப் பதக்கமும், குரோஷிய வீரர் வெலிமிர் சாண்டர் 19.98 மீட்டர் தூரம் வீசி வெள்ளிப் பதக்கமும் வென்றார்.

எனினும் அவரது வெற்றிக்கு எதிராகவும் போட்டியில் கலந்துகொண்டதில் அவரது தகுதி தொடர்பாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து,  அவரது வெற்றி நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. வினோத் குமார் F52 பிரிவில் பங்கேற்றிருந்தார். இந்த பிரிவு  தசைபலம் தளர்வு, கை, கால்களில் குறைபாடு மற்றும் முதுகு தண்டுவட பாதிப்பு உள்ளோருக்கானது ஆகும்.  தற்போது இந்த போட்டியில் பங்கேற்க  அவருக்கு தகுதி இல்லை என  பாராஒலிம்பிக் குழு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: தங்கப் பதக்கம் அனைத்து இந்தியர்களுக்கும் அர்ப்பணம்- அவானி லெகாரா

இதையடுத்து வினோத் குமாரின் வெற்றி செல்லாது என்று அறிவிக்கப்பட்டதோடு அவர் பெற்ற வெண்கலப் பதக்கமும் திரும்ப பெறப்பட்டது. இதனால் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 7ல் இருந்து 6 ஆக குறைந்துள்ளது. வினோத் குமாரின் வெற்றி செல்லாது என்பதால் 4வது இடத்தில் இருந்த   லத்வியா வீரர் ஐகார்ஸ் அபினிஸ் மூன்றாவது இடத்துக்கு முன்னேறினார். அவருக்கு இந்த வெண்கலப் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: News On Instagram, Tokyo Paralympics