முகப்பு /செய்தி /விளையாட்டு / பாராலிம்பிக்கில் தொடரும் பதக்க வேட்டை... வெண்கலம் வென்ற இந்திய வீரர் சிங்ராஜ் அதானா

பாராலிம்பிக்கில் தொடரும் பதக்க வேட்டை... வெண்கலம் வென்ற இந்திய வீரர் சிங்ராஜ் அதானா

சிங்ராஜ் அதானா

சிங்ராஜ் அதானா

டோக்கியோ பாராலிம்பிக் துப்பாக்கி சூடுதல் போட்டியில் இந்திய வீரர் சிங்ராஜ் அதானா வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.

  • Last Updated :

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாராலிம்பிக் போட்டிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பாராலிம்பிக்கில் இந்திய வீரர்களின் பதக்க வேட்டை தினந்தோறும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. பாராலிம்பிக்கில் இன்று நடைபெற்ற ஆடவர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் எஸ்.எச்.1 துப்பாக்கி சுடுதல் இறுதி போட்டியில் இந்தியாவை சேர்ந்த வீரர் சிங்ராஜ் அதானா 3வது இடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.

சிங்ராஜ் மொத்தம் 216.8 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தை பிடித்தார். 8 பேர் பங்கேற்ற இறுதி போட்டி முடிவில் சிங்ராஜ் அதானா வெண்கல பதக்கத்தை தட்டி சென்றார். நேற்று மகளிருக்கான துப்பாகிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் அவானி லெகாரா தங்கம் வென்றதை அடுத்து இன்று இந்தியாவுக்கு துப்பாக்கிச் சுடுதலில் மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது.

டோக்கியோ பாராலிம்பிக்கில் இந்தியா இதுவரை 2 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம் பதக்கங்கள் உடன் மொத்தம் 8 பதக்கங்களை வென்று அசத்தி உள்ளது.

Also Read : என் தாயாரின் கண்களில் ததும்பிய அந்தப் பெருமை...: மனம் திறந்த பாராஒலிம்பிக் தங்கமகன் சுமித் ஆன்டில்

மேலும் இன்று மாலை 3.55 மணிக்கு ஆடவர் உயரம் தாண்டுதல் டி(63) போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு பங்கேற்கிறார். இதில் மாரியப்பன் தங்கம் வெல்லுவாரா என்று பலரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். கடந்த 2015 ரியோ பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் (டி63) தமிழகத்தை சேர்ந்த தங்கவேலு மாரியப்பன் தங்கம் வென்றார் என்பது குறிப்பிடதக்கது.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Tokyo Paralympics