Home /News /sports /

டோக்கியோ பாராஒலிம்பிக்: வெள்ளி வென்றார் இந்திய வீரர் பிரவீண் குமார்

டோக்கியோ பாராஒலிம்பிக்: வெள்ளி வென்றார் இந்திய வீரர் பிரவீண் குமார்

பிரவீண் குமார் வெள்ளி வென்றார்.

பிரவீண் குமார் வெள்ளி வென்றார்.

டோக்கியோ பாரலிம்பிக் போட்டிகளில் இந்திய வீரர் பிரவீண் குமார் உயரம் தாண்டுதலில் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

    டோக்கியோ பாரலிம்பிக் போட்டிகளில் இந்திய வீரர் பிரவீண் குமார் உயரம் தாண்டுதலில் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

    இதன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. பிரவீண் குமார் உயரம் தாண்டுதலில் பதக்கம் வென்ற 4வது இந்திய வீரர் ஆனார். இவர் 2.07மீ உயரம் தாண்டி புதிய ஆசிய சாதனையைப் படைத்தார்.

    நிஷாத் குமார், மாரியப்பன் தங்கவேலு, ஷரத் குமாருக்கு அடுத்து பிரவீண் குமார் ஹை ஜம்ப்பில் வெள்ளிப் பதக்கம் வென்றார். பிரிட்டன் வீரர் ஜொனாதன் புரூம் எட்வர்ட்ஸ் 2.10 மீ உயரம் தாண்டி தங்கம் வென்றார்.

    பிரவீண் குமார் தன் முதல் தாண்டுதலில் 1.83 மீ தாண்டினார். முதல் ஜம்ப்பில் நேரடியாக 1.88 மீ தாண்டினார். பிறகு 1.97 மீ தாண்டியதில் பதக்கம் உறுதியானது. பிறகு 2.01 மீ உயரம் தாண்ட இரண்டு முயற்சிகள் எடுத்துக் கொண்டார். 2.07 மீ உயரத்தை அவரால் முதல் முறை தாண்ட முடியவில்லை. 2வது முறை மிகவும் அபாரமாகத் தாண்டியதில் ஆசிய சாதனை படைத்ததோடு வெள்ளிப்பதக்கம் வென்றார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தங்கம் வென்ற பிரிட்டன் வீரர் புரூம் எட்வர்ட்ஸ் 2.10 மீ உயரத்தை முதல் முறையிலேயே தாண்டவில்லை, 2வது முயற்சியில்தான் தாண்டினார். இந்த உயரத்தை பிரவீண் குமார் 3 முறை முயன்றும் முடியவில்லை அதனால் வெள்ளிப்பதக்கம் பெற்றார்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Medal winners, News On Instagram, Tokyo Paralympics

    அடுத்த செய்தி