• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • இன்று வேட்டை! இந்தியாவுக்கு பாராலிம்பிக்ஸில் தங்கம், வெள்ளி பதக்கம்

இன்று வேட்டை! இந்தியாவுக்கு பாராலிம்பிக்ஸில் தங்கம், வெள்ளி பதக்கம்

manish narwal

manish narwal

ஒரே பிரிவில் இந்தியாவுக்கு தங்கமும், வெள்ளியும் வென்று இந்தியர்கள் வரலாறு படைத்திருக்கின்றனர்.

  • Share this:
டோக்கியோ பாராலிம்பிக்ஸ் 2020 போட்டியில் இன்று இந்தியாவுக்கு ஒரு தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கம் கிடைத்திருக்கிறது. துப்பாக்கிச்சுடுதல் 50 மீட்டர் பிஸ்டல் கலப்பு (SH1) பிரிவில் மனிஷ் நர்வால் மற்றும் சிங்ராஜ் அதானா பதக்க வேட்டையில் ஈடுபட்டனர்.

டோக்கியோ பாராலிம்பிக்ஸ் 2020 போட்டியில் 50மீ கலப்பு துப்பாக்கிச் சுடுதல் பிஸ்டல் பிரிவில் (SH1) இறுதிப் போட்டி இன்று காலை நடைபெற்றது. இதில் இந்திய வீரர்கள் மனிஷ் நர்வாலும், சிங்ராஜ் அதானாவும் சிறப்பான திறனை வெளிப்படுத்தினர். இலக்கை துல்லியமாக சுட்டு அசரவைத்தனர்.

இப்போட்டியில் 19 வயதான மனிஷ் நர்வால் 218.2 புள்ளிகளுடன் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை தனதாக்கினார். 2020 பாராலிம்பிக்கில் இந்தியர் வெல்லும் 3வது தங்கம் இதுவாகும், இவர் ஏற்கனவே 229.1 புள்ளிகளுடன் இப்பிரிவில் உலக சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு இந்திய வீரரான சிங்ராஜ் அதானா 216.7 புள்ளிகளுடன் இரண்டாம் இடம் பெற்று வெள்ளிப் பதக்கத்தை வென்றார். இதே பிரிவில் சீனாவின் Xiagolong Lou மற்றும் ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டியின் Sergey Malyshev ஆகியோர் முறையே 3 மற்றும் 6ம் இடங்களை பிடித்தனர்.

ஒரே பிரிவில் இந்தியாவுக்கு தங்கமும், வெள்ளியும் வென்று இந்தியர்கள் வரலாறு படைத்திருக்கின்றனர். இது இந்தியர்களை குஷிப்படுத்தியிருக்கிறது. மேலும் இவ்விரு பதக்கங்கள் மூலம் இந்தியாவின் பாராலிம்பிக் பதக்க எண்ணிக்கை 15 ஆக அதிகரித்திருக்கிறது.

Also Read:  ரயிலில் ஜட்டியுடன் வாக்கிங் சென்ற எம்.எல்.ஏ – பயணிகள் அதிர்ச்சி!

இது தவிர இந்திய பேட்மிண்டன் வீரர்கள் பிரமோத் பகத் ஆடவர் ஒற்றையர் SL3 தங்கப்பதக்கத்துக்கான போட்டிக்கும், சுஹாஸ் யதிராஜ் SL4 பதக்கத்துக்கான போட்டிக்கும் முன்னேறியிருப்பதால் இந்தியாவுக்கு மேலும் இரண்டு பதக்கங்கள் கிடைப்பது உறுதியாகி இருக்கிறது.

இதுதவிர மனோஜ் சர்க்கார், தருண் தில்லான் ஆகியோர் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டிக்கு முன்னேறியிருக்கின்றனர்.

பரிசுத் தொகை

தங்கம் வென்ற மணீஷ் நர்வால் மற்றும் வெள்ளி வென்ற சிங்ராஜ் ஆகியோருக்கு தலா ரூ.6 கோடி, ரூ.4 கோடி பரிசுத் தொகையை அறிவித்தது ஹரியானா

நடப்பு பாராலிம்பிக் போட்டிகளில் இந்திய வீரர்கள் அசத்தலான ஆட்டத்திறனை வெளிப்படுத்தி வருகின்றனர்.



Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: