Home /News /sports /

பாராலிம்பிக்: 2-வது பதக்கம் வென்று அவனி லெகாரா வரலாறு படைத்தார்

பாராலிம்பிக்: 2-வது பதக்கம் வென்று அவனி லெகாரா வரலாறு படைத்தார்

பாராலிம்பிக்கில் தங்கம் வென்று வரலாறு படைத்த அவானி லெகாரா, வெண்கலமும் வென்று சாதனை

பாராலிம்பிக்கில் தங்கம் வென்று வரலாறு படைத்த அவானி லெகாரா, வெண்கலமும் வென்று சாதனை

டோக்கியோ பாராலிம்பிக்ஸ் 2020 போட்டியில் 50மீ துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் வெண்கலம் வென்ற இந்திய வீராங்கனை அவனி லெகாரா ஒரே பாராலிம்பிக் தொடரில் 2 பதக்கங்கள் வென்று வரலாறு படைத்துள்ளார்.

    டோக்கியோ பாராலிம்பிக்ஸ் 2020 போட்டியில் 50மீ துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் வெண்கலம் வென்ற இந்திய வீராங்கனை அவனி லெகாரா ஒரே பாராலிம்பிக் தொடரில் 2 பதக்கங்கள் வென்று வரலாறு படைத்துள்ளார். முன்னதாக இவர் 10மீ ஏர் ரைபிள் போட்டியில் தங்கம் வென்று வரலாறு படைத்தது குறிப்பிடத்தக்கது.

    பாராலிம்பிக் போட்டிகளில் 2 பதக்கங்கள் வென்ற முதல் வீராங்கனை என்ற சாதனையை நிகழ்த்திய அவனி லெகாரா இன்று நின்ற நிலையில் துப்பாக்கிச் சுடுதலில் 15 ஷாட்கள் அடித்து மொத்தம் 149.5 புள்ளிகள் பெற்று அட்டவணையில் 4ம் இடத்தில் இருந்தார். படுத்த நிலையில் சுடுதலில் 50.8., 50.3, 48.4 என்று புள்ளிகளைப் பெற்றதில் மொத்தமாக 149.5 புள்ளிகள் வென்றார்.

    பிறகு 3ம் இடத்துக்காக உக்ரைனின் ஷேட்னிக்குடன் இவருக்கு போட்டி ஏற்பட்டது. இதில் லெகாரா 10.5 புள்ளிகள் எடுக்க உக்ரைன் வீராங்கனை 9.9 புள்ளிகள் மட்டுமே பெற்று பின் தங்கினார். இதன் மூலம் வெண்கலம் வென்றார்.

    ஒரே தசமப் புள்ளியில் வெள்ளியை சீன வீராங்கனையிடம் பறிகொடுத்தார், அதாவது லெகார 10.2 புள்ளிகள் எடுக்க சீன வீராங்கனை 10.3 புள்ளிகள் பெற்றார்.

    Also Read: டோக்கியோ பாராஒலிம்பிக்: வெள்ளி வென்றார் இந்திய வீரர் பிரவீண் குமார்

    ஜெய்பூரிலிருந்து வந்துள்ள அவனி லெகாரா இந்த பாராலிம்பிக் தொடரில் அபாரமாக ஆடி வருகிறார். இன்னும் ஒரு ஈவண்ட் இவருக்கு பாக்கியிருக்கிறது. இதிலும் பதக்கம் வென்றால் ஒரே பாராலிம்பிக்கில் 3 பதக்கங்களுக்கு சொந்தக்காரர் ஆவார் அவனி லெகாரா.

    இதில் சீனா தங்கம் வென்றது, ஜெர்மனி வெள்ளிப்பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: News On Instagram, Tokyo Paralympics

    அடுத்த செய்தி