பேட்மிண்டனில் தங்கம் வென்றார் கிருஷ்ணா நாகர் - பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு 5வது தங்கம்!

கிருஷ்ணா நகர்

இறுதி செட்டை 21-17 என்ற புள்ளிகளுடன் வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார் கிருஷ்ணா நாகர்.

  • Share this:
டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பில் 2020 தொடரில் இந்தியாவின் பேட்மிண்டன் வீரர் கிருஷ்ணா நாகர் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் இந்தியாவுக்கு பாராலிம்பிக்கில் 5வது தங்கப் பதக்கம் கிடைத்திருக்கிறது.

SH6 பேட்மிண்டன் பிரிவில் ஹாங்காங்கின் சூ மேன் கை-யை எதிர்த்து விளையாடிய கிருஷ்ணா நாகர், முதல் செட்டை 21-17 என்ற கணக்கில் கைப்பற்றினார். பின்னர் சுதாரித்து விளையாடிய ஹாங்காங் விரர் இரண்டாவது செட்டை 21-16 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இதனையடுத்து தங்கப் பதக்கத்துக்கான மூன்றாவது செட் பரபரப்பாக நகர்ந்தது. இருவரும் மாறி மாறி புள்ளிகளை பெற்று சளைக்காமல் ஆடி வந்தனர். போட்டியின் மத்திய பகுதியில் கிருஷ்ணா நாகர், தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்தினார். இறுதி செட்டை 21-17 என்ற புள்ளிகளுடன் வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.

போட்டியின் போது


முன்னதாக மற்றொரு பேட்மிண்டன் வீரரும் ஐஏஎஸ் அதிகாரியுமான சுஹாஸ் யதிராஜ் வெள்ளிப்பதக்கம் வென்றார். இவர் உலகின் முதல் நிலை வீரரான பிரான்சின் லுகாஸ் மசூரிடம் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தார். 3 முறை உலக சாம்பியனான லுகாஸுக்கு கடும் போட்டி ஏற்படுத்தி அவருக்கு அதிர்ச்சி தந்தார் சுஹாஸ் யதிராஜ்.

  
Published by:Arun
First published: