வில்வித்தை பதக்க வாய்ப்பு நழுவியது: தீபிகா குமாரி காலிறுதியில் தோல்வி

காலிறுதியில் தீபிகா தோல்வி

ஒலிம்பிக் மகளிர் வில்வித்தை போட்டி காலிறுதியில் இந்தியாவின் தீபிகா குமாரி, கொரியாவின் ஆன் சான் என்ற வீராங்கனையிடம் 6-0 என்ற செட்களில் தோல்வி தழுவினார்.

 • Share this:
  ஒலிம்பிக் மகளிர் வில்வித்தை போட்டி காலிறுதியில் இந்தியாவின் தீபிகா குமாரி, கொரியாவின் ஆன் சான் என்ற வீராங்கனையிடம் 6-0 என்ற செட்களில் தோல்வி தழுவினார்.

  காலிறுதி வரை அபாரமாக ஆடி வந்த தீபிகா குமாரி நிச்சயம் ஒரு பதக்கம் வென்று வெற்றியுடன் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் காலிறுதியில் மூன்று செட்களில் முதல் செட்டில் 7-10-10 என்று 27 புள்ளிகளைப் பெற்று அசத்தினார்.

  2வது செட்டில் முதல் ரிலீஸே மைய 10 புள்ளிகளை அம்புத் தாக்க உற்சாகம் பெற்றார் தீபிகா, ஆனால் அடுத்த 2 ஷாட்களும் திசை மாற 7, 7 என்று 24 புள்ளிகளை மட்டுமே பெற்றார்.

  Also Read: ஒலிம்பிக் குத்துச் சண்டை: இந்தியாவுக்கு 2வது பதக்கம் உறுதி - வரலாறு படைத்தார் லவ்லினா போர்கோஹெய்ன்!

  மூன்றாவது சுற்றில் சுத்தமாக ஏமாற்றமளிக்க 7-8-9 என்று மீண்டும் 24 புள்ளிகளையே பெற்றார் தீபிகா குமாரி.

  மாறாக கொரியா வீராங்கனை ஆன் சென் முதல் செட்டில் 3 முறை 10 புள்ளிகள் இலக்கை துல்லியமாகத் தாக்கி 30 புள்ளிகளை எடுத்து தீபிகாவுக்கு அதிர்ச்சியளித்தார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  2வது செட்டில் ஆன் சான், 9,10, 7 என்று 26 புள்ளிகளைத்தான் பெற்றார், ஆனால் இதில் தீபிகா குமாரி 24 புள்ளிகளையே பெற்றது குறிப்பிடத்தக்கது. கடைசியில் ஆன் சான் 8-9-9 என்று 26 புள்ளிகளைப் பெற தீபிகா 7-8-9 என்று 24 புள்ளிகளையே பெற்று 6-0 என்று தோல்வி அடைந்தார்.

  Also Read: Tokyo Olympics: வில்வித்தை காலிறுதியில் தீபிகா குமாரி: த்ரில் போட்டியில் ரஷ்ய வீராங்கனையை வீழ்த்தினார்

  இத்தோடு வில்வித்தையில் இந்தியாவின் பதக்கக் கனவு முடிந்தது என்றே கூற வேண்டும்.
  Published by:Muthukumar
  First published: