• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • Tokyo Olympics| இந்திய மகளிர் ஹாக்கி அணி போராடி தோல்வி- பிரிட்டனுக்கு வெண்கலம்

Tokyo Olympics| இந்திய மகளிர் ஹாக்கி அணி போராடி தோல்வி- பிரிட்டனுக்கு வெண்கலம்

பிரிட்டன் வீராங்கனையைத் தடுக்கும் இந்திய வீராங்கனை நவ்ஜோத் கவுர். இந்தியா 4-3 தோல்வி.

பிரிட்டன் வீராங்கனையைத் தடுக்கும் இந்திய வீராங்கனை நவ்ஜோத் கவுர். இந்தியா 4-3 தோல்வி.

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி அணி வெண்கலப்பதக்கத்துக்கான போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி போராடி தோல்வி தழுவியது.

  • Share this:
    டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி அணி வெண்கலப்பதக்கத்துக்கான போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி போராடி தோல்வி தழுவியது.

    கிரேட் பிரிட்டன் அணி 4-3 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றது. இந்திய கோல் கீப்பர், புதிய சுவர் சவிதா புனியா மைதானத்திலேயே அழுதுவிட்டார்.

    ஏனெனில் இந்தியா ஒரு கட்டத்தில் 0-2 என்று பிரிட்டனிடம் பின் தங்கி பிறகு 3-2 என்று முன்னிலை பெற்றிருந்தது, பிரிட்டனின் முதல் கோல் இந்திய அணியின் சேம்சைடு கோலாக மாறியதும் சற்றே பின்னடைவை ஏற்படுத்தியது.

    வென்றிருந்தால் புதிய வரலாறு படைத்திருக்கும், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று முதல் வரலாறு படைத்திருக்கும். ஆனால் என்ன செய்வது கோல் கீப்பர் சவிதா புனியா பயங்கரமாக தடுப்பு ஆட்டத்தை வெளிப்படுத்தினார், ஒரு 8-9 கோல் ஷாட்களையாவது தடுத்திருப்பார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக பதக்கம் கைநழுவிப் போனது.

    காரணம் பெரும்பங்கு இடைவேளைக்குப் பிறகான ஆட்டத்தில் இந்திய அணி 10 வீராங்கனைகளுடனேயே ஆட நேரிட்டது, அப்படி ஃபவுல் செய்த போதெல்லாம் கோல் வாய்ப்பு பிரிட்டனுக்கு கிடைத்தது.



    16வது நிமிடத்தில் பிரிட்டன் வீராங்கனை கொண்டு சென்ற பந்தை மற்றொரு பிரிட்டன் வீராங்கனைக்கு கோல் அருகே அடிக்க அப்போது இந்திய வீராங்கனை தீப் கிரேஸ் எக்காவின் ஸ்டிக்கில் பட்டு சேம்சைடு கோல் ஆனது, பிரிட்டன் 1-0 என்று முன்னிலை பெற்றது.

    24வது நிமிடத்தில் பிரிட்டன் வீராங்கனை சாரா ராபர்ட்ஸன் இன்னொரு கோலை அடிக்க 2-0 என்று பிரிட்டன் முன்னிலை பெற்றது.

    ஆனால் 25வது நிமிடத்தில் இந்திய அணி தாக்குதல் தொடுக்க அடுத்தடுத்து 2 பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைக்க அதில் ஒன்றை குர்ஜித் கோலாக மாற்றினார் 2-1 என்று இந்தியா இடைவெளியைக் குறைத்தது. பிறகு 26வது நிமிடத்தில் மீண்டும் பெனால்டி கார்னர் வாய்ப்பில் குர்ஜித் இன்னொரு கோலை அடிக்க 2-2 என்று சமன் ஆனது.

    பிறகு 29வது நிமிடத்தில் ஹாட்ரிக் வீராங்கனை வந்தனா கட்டாரியா, சுஷிலா சானு இடது புறத்திலிருந்து அனுப்பிய கிராஸை சர்மிளா தேவி, நவ்நீத் கவுர் நழுவ விட வந்தனா கட்டாரியா பந்தை கோலாக மாற்ற இந்திய அணி 0-2 என்ற பின்னடைவிலிருந்து எழுச்சி பெற்று 3-2 என்று முன்னிலை பெற்றது.

    34வது நிமிடத்தில் சவிதா பூனியா மிகப்பெரிய சேவ் ஒன்றை நிகழ்த்தினார், ஆனால் 35வது நிமிடத்தில் பிரிட்டன் கேப்டன் ஹோலி பெர்ன் வெப் கோலை அடித்து 3-3 என்று சமன் செய்தார்.

    அதன் பிறகு இறுதி 15 நிமிட நேர ஆட்டத்தில்தான் இந்தியா தொடர்ந்து ஃபவுல் செய்து 10 வீராங்கனைகளுக்குக் குறுக்கப்பட 48வது நிமிடத்தில் தொடர் பெனால்டி கார்னரில் ஒன்றை கிரேஸ் பால்ஸ்டன் கோலாக மாற்ற அதுவே பிரிட்டனின் வெண்கல கோலாக மாறியது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    பிரிட்டன் இந்திய கோல் பகுதிக்குள் 23 முறை ஊடுருவ இந்தியா பிரிட்டன் பகுதிக்குள் 9 முறையே ஊடுருவியது, ஆனால் 9 முறை ஊடுருவலில் 3 கோல்கள் என்பதும் 23 முறை ஊடுருவலில் 4 கோல்கள் என்பதும் இந்திய அணியின் ஸ்ட்ரைக்கிங் பவரை காட்டுவதோடு இரும்பு மங்கை சவிதா புனியாவின் கோல்கீப்பிங் அதிதிறமைகளையும் பறைசாற்றுவதாக அமைந்தது. இந்திய மகளிர் ஹாக்கி அணி தோல்வியில் தொடங்கி கடைசியில் நம் அனைவரையும் பெருமைக் கொள்ளச் செய்யும் ஒரு நிலைக்கு வந்ததை பாராட்டாமல் இருக்க முடியாது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: