Tokyo Olympics: டோக்கியோ ஒலிம்பிக் ஸ்டேடியத்தில் இளம்பெண் பாலியல் பலாத்காரம்: உஸ்பெகிஸ்தான் நபர் கைது

டோக்கியோ ஒலிம்பிக்

டோக்கியோ ஒலிம்பிக் ஏற்கெனவே கொரோனா சர்ச்சையில் சிக்கியுள்ள நிலையில் தற்போது பாலியல் குற்றமும் நிகழ்ந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

  • Share this:
    டோக்கியோ ஒலிம்பிக் ஏற்கெனவே கொரோனா சர்ச்சையில் சிக்கியுள்ள நிலையில் தற்போது பாலியல் குற்றமும் நிகழ்ந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    டோக்கியோ ஒலிம்பிக் ஸ்டேடியத்தில் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக எழுந்த புகாரில் உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த பல்கலைக் கழக மாணவர் இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார், பலாத்காரத்துக்கு ஆளான பெண்ணுக்கு வயது 20. வெள்ளிக்கிழமை அன்று இந்தக் கொடூரம் நிகழ்ந்ததாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

    Also Read: Tokyo Olympics Anti-sex beds| ஓலிம்பிக் கிராமத்தில் உடலுறவை தடுக்க கார்ட்போர்டு கட்டில்?- ‘பகீர்’ தகவலை புகைப்படங்களுடன் பகிர்ந்த அமெரிக்க வீரர்- கமிட்டி மறுப்பு
     30 வயதாகும் இந்த நபரின் பெயர் டாவ்வென்பெக் ரக்மத்துல்லா என்று கூறப்படுகிறது. டோக்கியோ மெட்ரோபாலிட்டன் போலீஸ் துறை இந்தத் தகவலை வெளியிட்டது, ஆனால் நடந்த இடம் பற்றிய விவரங்களை வெளியிடவில்லை.



    இந்த நபருக்கு அந்த ஜப்பானிய பெண்ணை ஏற்கெனவே தெரிந்திருக்கும் என்றும் பார்வையாளர்கள் இருக்கை அருகே அந்த 20 வயது பெண் பாலியல் தாக்குதலுக்கு உள்ளானதாக உள்ளூர் செய்திகள் கூறுகின்றன. ஒலிம்பிக் தொடக்க விழா ஒத்திகை நடைபெற்றதை இவர்கள் பார்க்க வந்ததாக தெரிகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இருவரும் ஒலிம்பிக் போட்டிகளுக்காக நியமிக்கப்பட்ட பகுதி நேர ஊழியர்கள் என்று கியோட்டோ செய்திகள் கூறுகின்றன.

    ஆனால் கைது செய்யப்பட்ட அந்த உஸ்பெகிஸ்தான் நபரோ தன்னுடைய ஆசைக்கு அந்தப் பெண் முட்டுக்கட்டை போடவில்லை, மாறாக ஊக்குவித்தார் என்று கூறியுள்ளதாக மற்றொரு உள்ளூர் ஊடகம் கூறுகிறது.

    இது டோக்கியோ ஒலிம்பிக் தொடருக்கு முன்னால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Published by:Muthukumar
    First published: