Tokyo Olympics | கடுமையாகக் காற்று வீசும் பார்க்கில் பதக்கம் வெல்வாரா தீபிகா குமாரி?- வில்வித்தை போட்டி நேரம்

தீபிகா குமாரி

ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியிலிருந்து சுமார் 15-20 கிமீ தூரத்தில் உள்ள ராது சாத்தி கிராமத்தைச் சேர்ந்தவர்தான் இந்திய வில்வித்தை உலகின் நம்பர் 1 வீராங்கனை தீபிகா குமாரி. டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தையில் பதக்கம் வென்று வரலாறு படைப்பாரா என்ற ஆர்வம் எழுந்துள்ளது.

  • Share this:
    ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியிலிருந்து சுமார் 15-20 கிமீ தூரத்தில் உள்ள ராது சாத்தி கிராமத்தைச் சேர்ந்தவர்தான் இந்திய வில்வித்தை உலகின் நம்பர் 1 வீராங்கனை தீபிகா குமாரி. டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தையில் பதக்கம் வென்று வரலாறு படைப்பாரா என்ற ஆர்வம் எழுந்துள்ளது.

    ஆனால் இதற்கு தீபிகா குமாரி கடுமையாகப் பாடுபடவேண்டும், காரணம் கோவிட் காரணமாக தயாரிப்பில் இருக்கிறாரா என்பது தெரியவில்லை. இந்த முறை ஒலிம்பிக் வில்வித்தைப் போட்டிகள் நடக்கும் ஒலிம்பிக் கிராமத்தில உள்ள யுமனஷிமோ பார்க்கில் கடுமையாக காற்று வீசக்கூடும்.

    Also Read: Tokyo Olympics | டோக்கியோ ஒலிம்பிக்: வில்வித்தைப் போட்டிகளின் இந்திய ஒளிபரப்பு நேரம் 

    கோவிட் காரணமாக பயிற்சியும் சரிவர செய்ய முடியவில்லை என்று தீபிகா குமாரி ஒரு நேர் காணலில் தெரிவித்தார். மற்றொரு ஒலிம்பிக் வில்வித்தை சக வீரர் அதானு தாஸை தீபிகா திருமணம் செய்து கொண்டதால் கொரோனா காலத்தில் வீட்டின் அருகிலேயே பயிற்சி செய்ய முடிந்தது. இந்தப் பயிற்சிகள் குறித்து தீபிகா குமாரியே சமூக ஊடகங்களில் பதிவுகளை வெளியிட்டார்.



    பாரீசில் வில்வித்தை உலகக்கோப்பை ஸ்டேஜ் 3-ல் தங்கப்பதக்க ஹாட்ரிக் அடித்தார் தீபிகா. 2012-லும் சிறந்த வீராங்கனையாகவே லண்டன் ஒலிம்பிக்கில் அறிமுகமாகப் பங்கு பெற்றார், ஆனால் லார்ட்ஸில் நடந்த வில்வித்தை போட்டி அவரது கனவுகளை உடைத்தது.

    கடந்த 2 ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் கடந்த கால அனுபவங்களிலிருந்து பாடம் கற்றுக் கொண்டேன். மனத்தளவில் தயாராகும் பயிற்சியில் ஈடுபட்டேன். இப்போது நல்ல தன்னம்பிக்கை பெற்றுள்ளேன். இப்போது நான் என் வில், இலக்கு என்று கவனம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது, என்றார் தீபிகா.

    ரியோ ஒலிம்பிக்கில் ரவுண்ட் 16-ல் வெளியேறினார்.

    27 வயதான தீபிகா குமாரி உலகக்கோப்பைகளில் 9 தங்கம், 12 வெள்ளி, 7 வெண்கலங்கள் வென்றார். காமன்வெல்த் போட்டிகளில் தனிநபர் மற்றும் அணித்தரப்பில் 2 முறை தங்கம் வென்றுள்ளார்.

    இந்தியாவிலிருந்து மகளிர் பிரிவில் ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தகுதி பெறும் ஒரே வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரிதான், ஆடவர் பிரிவில் அதானு, தருந்தீப் ராய், பிரவீன் ஜாதவ் ஆகியோர் உள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்திய வீரர்கள் கலந்து கொள்ளும் போட்டி இந்தியாவில், ஒலிம்பிக் சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் பல மொழிகளில் நேரடியாக ஒளிபரப்பப்படும். விளையாட்டு தூர்தர்ஷனிலும் நேரடியாக ஒளிபரப்பப்படும். ஆன்லைன் பார்வையாளர்களுக்கு, இது சோனியின் டிஜிட்டல் தளமான சோனி எல்.ஐ.வி.யில் நேரலையில் இருக்கும்.

    பெண் தனிநபர்: ஜூலை 23- காலை 5:30

    ஆண் தனிநபர்:ஜூலை 23- காலை 9:30

    கலப்பு இரட்டையர்- முன் கால் இறுதி- ஜூலை 24 காலை 6

    கலப்பு இரட்டையர்- கால் இறுதி-இறுதி வரை- ஜூலை 24- காலை 10:45

    ஆண்கள்- முன் காலிறுதி- ஜூலை 26- காலை 6

    ஆண்கள்- கால் இறுதி-இறுதி வரை- ஜூலை 26- காலை 9:45

    ஆண்கள் & பெண்கள்- தனிநபர் 1/32 & 1/16 சுற்றுகள் ஜூலை 27

    முதல் ஜூலை 29 வரை காலை 6 மணி

    பெண்கள் தனிநபர்- 1/8 சுற்று- ஜூலை 30-காலை 6 மணி

    பெண்கள் தனிநபர்-காலிறுதி -இறுதி வரை-ஜூலை 30- காலை 11:15

    ஆண்கள் தனிநபர்- 1/8 சுற்று- ஜூலை 31- காலை 6 மணி

    ஆண்கள் தனிநபர்- கியூஎஃப் - இறுதி வரை- ஜூலை 31- காலை 11:15
    Published by:Muthukumar
    First published: