Tokyo Olympics: பெயர், கொடியை கூட பயன்படுத்த முடியாத ரஷ்யா: காரணம் என்ன?

ஆர்.ஓ.சி.

சிறந்த விளையாட்டு வீரர்களை கொண்டுள்ளபோதும், அவ்வப்போது ஊக்க மருந்து பரிசோதனையில் சிக்குவது ரஷ்யாவின் வழக்கம்.  ஊக்க மருந்து விவகாரத்தில் விதிகளை மீறியதாக இதுவரை  ரஷ்யாவின் 44 பதக்கங்கள் திரும்ப பெறப்பட்டுள்ளன

  • Share this:
டோக்கியோவில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டியில் ரஷ்யா இடம்பெறாத நிலையில்  அந்நாட்டு வீரர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர்.

ஒலிம்பிக் என்றாலே எப்போதும் நினைவுக்கு வரும் நாடாக ரஷ்யா இருந்து வந்துள்ளது. ஆனால், தற்போது டோக்கியோவில் நடைபெற்று வரும்  ஒலிம்பிக் போட்டியில் ரஷ்யா பங்கேற்றுள்ளதா என்பதே பலருக்கும் சந்தேகமாக உள்ளது.  ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழா தொடங்கி தற்போது நடைபெற்று வரும் போட்டிகள் வரை எதிலும் ரஷ்யா என்ற பெயரை நாம் பார்க்க முடியவில்லை.

இதற்கு காரணம் ரஷ்யா என்னும் நாடு இந்த ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவில்லை. ஆனால், அந்நாட்டின் வீரர்கள் ஒலிம்பிக்சில் பங்கேற்றுள்ளனர். ரஷ்யா ஒலிம்பிக் கமிட்டி (ROC) என்ற பெயரில் அவர்கள் போட்டியில் பங்கேற்றுள்ளனர். இதற்கு காரணம் என்ன?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சிறந்த விளையாட்டு வீரர்களை கொண்டுள்ளபோதும், அவ்வப்போது ஊக்க மருந்து பரிசோதனையில் சிக்குவது ரஷ்யாவின் வழக்கம்.  ஊக்க மருந்து விவகாரத்தில் விதிகளை மீறியதாக இதுவரை  ரஷ்யாவின் 44 பதக்கங்கள் திரும்ப பெறப்பட்டுள்ளன. வேறு எந்த நாடும் இந்த அளவுக்கு மோசமான நடவடிக்கைக்கு சிக்கியதில்லை.  இத்தனைக்கும் 2016ம் ஆண்டு பிரேசிலின் ரியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 19 தங்கம் உட்பட 56 பதக்கங்களை வென்று 4வது இடத்தை ரஷ்யா பிடித்திருந்தது.

இதையும் படிங்க: 2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வேன் - வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி உறுதி!


ரஷ்யா மீது ஊக்கமருந்து விவகாரத்தில் தொடர்ந்து பல்வேறு புகார்கள் குவிந்தன.  இது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அதில், புகார்கள் உண்மைதான் என்பதும் இந்த விதிமீறல்களுக்கு  அந்நாட்டு அரசே உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 2022ம் ஆண்டு வரை நான்கு ஆண்டுகளுக்கு சர்வதேச விளையாட்டு போட்டிகளில் ரஷ்யா பங்கேற்க  சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு ஆணையமான WADA கடந்த 2019ம் ஆண்டு தடை விதித்தது.



இதை எதிர்த்து விளையாட்டுக்கான தீர்ப்பாயத்தில் ரஷ்யா முறையிட்டது.  பின்னர் இந்த தடை 2 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது.  அதேபோல், சர்வதேச போட்டிகளில் ரஷ்யா பங்கேற்கலாம் என்றும் அதேவேளையில், தனது கொடி,  பெயர், தேசிய கீதம் ஆகியவற்றை ரஷ்யா பயன்படுத்த முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த தடை  காலத்தில் WADA-ல் பதிவு செய்துள்ள எந்த  குழுவின் சர்வதேச  விளையாட்டு போட்டிகளையும் ரஷ்யா நடத்த முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது.

மேலும்  படிக்க: 13 வயதில் ஒலிம்பிக் தங்கம் வென்று ஜப்பான் வீராங்கனை சாதனை!


இதன் காரணமாகவே, டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ள 335 ரஷ்ய வீரர்-வீராங்கனைகளும்   Russian Olympic Committee (ROC) என்ற பெயரில் பங்கேற்றுள்ளனர்.  இந்த போட்டியில் ரஷ்ய வீரர்கள் பதக்கம் வென்றாலும் அந்நாட்டு தேசிய கீதம் இசைக்கப்படாது.
Published by:Murugesh M
First published: