டோக்யோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம் தொடர்ந்து அடுத்தடுத்த ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை படைத்திருக்கிறார் பி.வி.சிந்து. அவரின் வெற்றியை நாடே வியந்து பாராட்டி வருகிறது. அதே நேரத்தில் சிந்துவின் வெற்றிக்கு பங்களிப்பை தந்த அவருடைய கோச் குறித்து தான் சமூக வலைத்தளங்களில் இப்போது பரபரப்பாக பேசப்படுகிறது.
மூன்றாவது இடத்துக்கான போட்டியில் சீன வீராங்கனையை, சிந்து வீழ்த்திய அந்த நொடிப்பொழுதில் உணர்ச்சிப்பெருக்கில் சிந்துவின் சத்தம் பேட்மிண்டன் கோர்ட்டில் எதிரொலித்தது. ஆனால் சிந்துவின் அந்த சத்தத்துக்கு பின்னணியில் அவருடைய பயிற்சியாளர் பார்க் எழுப்பிய உணர்ச்சிக்குரல் கவனம் ஈர்த்தது.
தென் கொரியாவைச் சேர்ந்த முன்னாள் சர்வதேச பேட்மிண்டன் வீரரான பார்க் இதுவரையில் வீரராகவோ, பயிற்சியாளராகவோ ஒலிம்பிக் பதக்கத்தை வெல்லவில்லை, ஆனால் அந்த ஏக்கத்தை சிந்துவின் வெண்கலப் பதக்கம் போக்கியிருக்கிறது. எனவே சிந்துவை போலவே மிகவும் உணர்ச்சிகரமாக காணப்பட்டார் பயிற்சியாளரான பார்க் தே சங்.
ஒலிம்பிக் வரலாற்றில் தொடர்ந்து அடுத்தடுத்த போட்டிகளில் பதக்கம் வென்ற 4வது வீராங்கனை என்ற பெருமையையும், அடுத்தடுத்த போட்டிகளில் தொடர்ந்து இரண்டு ஒலிம்பிக் பதக்கங்கள் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்றையும் சிந்து படைத்திருக்கிறார்.
சிந்துவின் வெற்றியை தொடர்ந்து அவரின் பயிற்சியாளரான 42 வயதாகும் பார்க் தே சங் பேசுகையில், தனிப்பட்ட முறையில் இது எனக்கு மிகவும் முக்கியமான தருணம், ஏனெனில் ஒரு வீரராகவோ, பயிற்சியாளராகவோ நான் இதுவரையில் ஒலிம்பிக் பதக்கத்தை வென்றதில்லை. நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன், இதை என்னால் விவரிக்க முடியவில்லை என்றார்.
Also Read: ஷேன் வார்னே-க்கு கொரோனா உறுதி.. அதிர்ச்சியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்!
2004 ஏதென்சில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பேட்மிண்டன் காலிறுதியில் பார்க் தோல்வி அடைந்தார். ஆனால் அகானே யமகுச்சியை சிந்து காலிறுதியில் வீழ்த்திய போது அவர் மகிழ்ச்சியில் திளைத்தார். ஒலிம்பிக்கில் தோல்வியின் வலியை அவர் ஏற்கனவே உணர்ந்திருந்தார்.
2002ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப்போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றிருக்கும் பார்க் தே சங், 2013ம் ஆண்டு முதல் பயிற்சியாளர் ஆக மாறினார். 2013 முதல் 2018 வரை 5 ஆண்டுகள் தென் கொரியாவின் தேசிய பேட்மிண்டன் பயிற்சியாளராக அவர் இருந்துள்ளார். இதன் பின்னர் இந்திய ஆடவர் அணியின் பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
மகளிர் பயிற்சியாளராக இருந்த Kim Ji Hyun திடீரென வெளியேறியதால் 2019ம் ஆண்டு சிந்துவிற்கு பயிற்சியாளராக அவர் மாறினார்.
Also Read: அரையிறுதி தோல்விக்கு பின்னர் சிந்து கண்ணீருடன் பேசினார்.. தந்தை நெகிழ்ச்சி...
சிந்துவின் ஒலிம்பிக் வெற்றிக்கு உறுதுணையாக Park Tae-Sang இருந்தாலும் கூட சிந்துவை ஆரம்பத்தில் இருந்தே வார்த்தெடுத்தவர் புல்லேலா கோபிசந்த் தான். கோபிசந்த் தேசிய பயிற்சியாளராக இருந்ததால் பிற தேசிய வீரர்களுக்காகவும், தன்னுடைய அகாடமியை சேர்ந்த வீரர்களுக்காகவும் அதிக நேரம் செலவிட்டதால் சிந்துவுக்கு முழ் நேர பயிர்சியாளர் தேவைப்பட்டார் என்பதால் 2017ம் ஆண்டு முதல் வேறு சில பயிற்சியாளர்களை வைத்துக் கொண்டார்.
சிந்து குறித்து பார்க் மேலும் கூறுகையில், ஆரம்பத்தில் சிந்துவிடம் டிபன்ஸ் கேம் தான் வீக் ஆக இருந்தது. சிந்துவின் அட்டாக் அபாரமாக இருந்தது. ஆனால் இப்போது சிந்துவின் டிபன்ஸ் 200% மெருகேறியுள்ளது என்றார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
வெண்கலம் வென்ற பிறகு தனது கோச் குறித்து சிந்து கூறுகையில், எனது கோச் இப்போது மகிழ்ச்சியாக உள்ளார். அவர் கடினமாக உழைத்தார், அவருக்கு நான் நன்றி செலுத்துகிறேன். கொரோனா காலத்தில் அவருடைய குடும்பத்தை பிரிந்து எனக்காக இந்தியாவில் தங்கி பயிற்சியளித்தார். என் மீது எப்போதும் நம்பிக்கை கொண்டிருந்தார். தற்போது நாங்கள் வென்றுவிட்டோம். வெண்கலம் வென்றவுடன் எனக்கு அழுகை வந்துவிட்டது, ஓடோடி சென்று என் கோச்சை கட்டிப்பிடித்தேன் என உணர்ச்சிகரமாக கூறினார் சிந்து.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: P.V.Sindhu, PV Sindhu, Tokyo Olympics