Tokyo Olympics: 100மீ நீச்சலில் தங்கம் வென்றார் 17 வயது அமெரிக்க வீராங்கனை

லிடியா ஜேகபி தங்கம் வென்ற மகிழ்ச்சியில்.

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் 100மீ பிரெஸ்ட் ஸ்ட்ரோக் நீச்சல் பிரிவில் அமெரிக்காவைச் சேர்ந்த 17 வயது வீராங்கனை லிடியா ஜேகபி தங்கம் வென்று சாதனை படைத்தார்.

  • Share this:
    நீச்சல் பிரிவில் அமெரிக்காவுக்கு டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் முதல் தங்கத்தை வென்றார் லிடியா. ஆனால் சக அமெரிக்க வீராங்கனை லில்லி கிங் தனது 2வது ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை வெல்வோம் என்று நினைத்தவருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.

    லிடியா கடைசி 50 மீட்டரில் பிரமாத வேகம் காட்டி 1 நிமிடம் 4.95 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கம் வென்றார்.

    வெள்ளிப் பதக்கத்தை தென் ஆப்பிரிக்காவின் தத்யானா ஷூன்மாக்கர் என்ற வீராங்கனை தட்டிச் சென்றார். தங்கம் வெல்ல முனைப்புடன் இருந்த அமெரிக்க வீராங்கனை லில்லி கிங் வெண்கலம் வென்றார், இது ஒலிம்பிக்கில் இவரது 3வது பதக்கமாகும்.

    Also Read: Tokyo Olympics டேபிள் டென்னிஸ்: ஆல் டைம் கிரேட் சீன வீரரை கதிகலக்கிய சரத் கமல் போராடி தோல்வி

    தங்கம் வென்ற லிடியா ஜேக்கபி கூறியதாவது, “நான் நிச்சயமாக தங்கப் பதக்கத்துக்காக குறிவைத்து தான் வேகம் கூட்டினேன். ஆனால் வெல்வேன் என்று எதிர்பார்க்கவில்லை.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Also Read: Tokyo Olympics | வெற்றியும் தோல்வியும் வாழ்வின் பகுதி- தமிழக வீராங்கனை பவானி தேவிக்கு பிரதமர் மோடி ஆறுதல்

    வெண்கலம் வென்று ஏமாற்றமடைந்த லில்லி கிங், லிடியா ஜேகபிக்காக தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தார்.

    பதகக்ப் பட்டியலில் அமெரிக்கா 8 தங்கம் 3 வெள்ளி, 8 வெண்கலங்களுடன் 19 பதக்கங்கள் பெற்று முன்னிலை வகிக்கிறது. ஜப்பான் 2ம் இடத்திலும் சீனா 7 தங்கங்களுடன் 3ம் இடத்திலும் உள்ளன.
    Published by:Muthukumar
    First published: